கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் பல தமிழ் படங்களில் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். அவர் தற்போது திருமணம் ஆகி கணவர் குழந்தைகளுடன் செட்டில் ஆகி விட்டர்.
இருந்தும் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். அதன் பின்னர் அது போன்ற கேரக்டர்களில் நடிக்க அவரை தேடி பல படங்கள் வந்தது. தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து முடித்துள்ளார் சிம்ரன்.
அதேபோல் சிவகார்த்திகேயன் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு மிக முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சிம்ரன். தற்போது இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்கலாமே:
விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்க போவது அனிருத் இல்லயாம்.. இவர் தானாம்
சிவாவுடன் நடிக்க எனக்கு செம்ம த்ரில்லாக இருந்தது. இந்த கேரக்டரை எனக்காக எழுதிய இயக்குனர் பொன்ராமிற்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த படத்தில் சிவாவுடன் நடித்த இந்த கேரக்டர் பலரால் பாராட்டப்படும். அப்படி ஒரு அழுத்தமான கேரக்டர் என கூறியுள்ளார் சிம்ரன்.