படத்துல நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க. ஆனா, அங்க போன அப்புறம் – போட்டு உடைத்த சிங்கம் புலி ஆண்டி நடிகை நீலு.

0
4251
neelu
- Advertisement -

சினிமாவில் துணை நடிகைகளுக்கு நடக்கும் பிரச்சனை குறித்து நீலு ஆண்டி மனம் விட்டு பேசி இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே நடிகைகள் பல படங்களில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் அவர்களுக்கு என்று சினிமாவில் ஒரு அந்தஸ்து கிடைப்பதில்லை. அதிலும் சிலர் ஒரு சில நிமிட காட்சிகளில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் பல ஆண்டு காலமாக சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் நீலு ஆண்டி. அதிலும் இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம் புலி படத்தின் மூலம் படு ஃபேமஸானார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகை நீலு அவர்கள் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும், நடிகர் ஜீவாவிற்கும், ஆண்டிக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த காட்சியின் இறுதியில் ஜீவா உடைய தோழியின் அம்மா தான் நீலு ஆண்டி. இந்த படத்தில் இவர் சில நிமிடத்தில் நடித்திருந்தாலும் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் இவர் சிங்கம் புலி படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இவர் சிங்கம் புலி படத்திற்கு முன்பாகவே ஆயுத எழுத்து, புலி, ஆஞ்சிநேயா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘கே ஜி எஃப் 2’ – முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

நீலு ஆண்டி அளித்த பேட்டி:

அதற்கு பிறகு இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நீலு ஆண்டி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகைகள் படும் கஷ்டங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகைகளுக்கு சரியான கழிவறை வசதி கூட இருக்காது. அமர்வதற்கு சார் கொடுக்கமாட்டார்கள். சில நேரம் உடை மாற்றும் அறை கூட இருக்காது. உடை மாற்றுவதற்கு அறை வேண்டும் என்று மேனேஜரிடம் கேட்டால் கதாநாயகியின் கேரவனுக்குள் சென்று மாட்டிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்.

படப்பிடிப்பு தளத்தில் நடப்பது:

சரி என்று கதாநாயகிகள் அறைக்கு போனால் அங்கு நடிகையின் உதவியாளர் இங்கெல்லாம் வரக்கூடாது என்று விரட்டிவார்கள். ஓய்வு எடுக்க கூட இடமிருக்காது. கிடைக்கும் இடத்தில் படுத்து தூங்குவோம். சில நேரம் பகல், இரவு என 18 மணி நேரம் கூட சூட்டிங் நடக்கும். அப்போதெல்லாம் மிகவும் சோர்வாக இருக்கும். சிறிது நேரம் உட்காரலாம் என்று நினைத்தால் ஒரு சேர் கூட இருக்காது. அருகில் இருக்கும் பைக் அல்லது தரையில் அமர்ந்து கொள்வோம். அதுமட்டும் இல்லாமல் அப்போதெல்லாம் துணை நடிகைகளை பார்த்தாலே முன்னணி நடிகைகள் விரோதிகள் போல் கேவலமாக தான் பார்ப்பார்கள்.

-விளம்பரம்-

துணை நடிகைகளை அழைக்கும் பெயர்கள்:

மேலும், படத்தின் சூட்டிங் மிகவும் தூரமான இடத்தில் நடக்கும்போது துணை நடிகைகள் எல்லோரும் சேர்ந்து வேனில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அந்த கேரக்டர் இந்த கேரக்டர் என்றும், ஹீரோயினுடன் வரும் சீன், ஹீரோவுடன் வரும் என்று தான் அழைப்பார்கள். எங்களது பெயரிட்டு அழைக்க மாட்டார்கள். அதோடு நீண்ட தூரம் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு குட்டியான உடைகளை கொடுத்து நடிக்க சொல்வார்கள். இதனை அணிந்து கொண்டு நடிக்க முடியாது என்று மறுத்தால் சரி நடிக்க முடியாதவர்கள் கிளம்புங்கள் என்று கூறிவிடுவார்கள். பணமும் தர மாட்டார்கள்.

துணை நடிகைகளுக்கு உள்ள பிரச்சனை:

வேறு வழியில்லாமல் நடிப்போம். எங்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கும். என்ன பண்ணுவது குடும்ப சூழ்நிலைக்கு ஒத்து கொண்டு நடிப்போம். சிலர் குட்டி உடைகளை அணிந்து நடிக்க முடியாது மறுத்துவிட்டு திரும்பியும் சென்றுவிடுவார்கள். இப்படி துணை நடிகர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. இதை எல்லாவற்றையும் கடந்து நடித்துக் கொடுத்து சம்பாதிக்கிறோம். ஆனால், எங்களுடைய கஷ்டம் பலருக்கு வெளியே தெரிவது கூட இல்லை. பல படங்களில் நடித்து இருந்தாலும் எங்களுக்கு என்ற அங்கீகாரமும் சினிமா உலகில் கிடைப்பதில்லை என்று உருக்கமாகக் கூறி இருந்தார். இப்படி நீலு ஆண்டி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement