அசிங்கமாக இருக்கும் பெண்களே பாலியல் புகார் கூறுகிறார்கள்..! பார்ட்டியில் தவறாக நடந்து கொண்ட நடிகர் திமிர் பேச்சு..!

0
805
Party
- Advertisement -

சமீப காலமாக சினிமா துறை சேர்ந்த நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறிவருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் பின்ணணி பாடகி சின்மை வரை பாலியல் சீண்டலுக்கு உள்ளதாக வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

போதிசத்வா:

- Advertisement -

Bodhisattva

அதுமட்டுமல்லாமல் #metoo என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பல்வேறு பெண்களும், நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான சீண்டல் அனுபவங்களை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் போதிசத்வா என்ற முன்னாள் விமான பணிப்பெண் ஒருவர் பிரபல இந்தி பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்ட்டி ஒன்றில் தன்னுடன் வந்து டான்ஸ் ஆடுமாறு அபிஜித் கேட்டார் என்றும்,அதனை போதிசத்வா மறுக்கவே அவரது அருகில் வந்து கையை பிடித்து முறுக்கி,கெட்ட வார்த்தையில் திட்டி மிரட்டினார் என்றும் முகநூல் பக்கத்தில் போதிசத்வா தெரிவித்துள்ளார்.

அபிஜித் பட்டாச்சார்யா:

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா, தனக்கு பார்ட்டிக்கு செல்லும் பழக்கமே இல்லை, இத்தனை ஆண்டுகளில் எந்த பார்ட்டிக்கு நான் செல்லவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிறக்கவே இல்லை என்று மிகவும் ஏளனமாக பதிலித்துள்ளார். உண்மையில் தற்போது அபிஜித் பட்டாச்சார்யாவுக்கு 60 வயதிற்கு மேல் ஆகியுள்ளது. அதே போல தன்மீது வைத்த குற்றச்சாட்டு பொய்யானது என்றும் குண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்கள் தான் ஆண்கள் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஆட்கள் விளம்பரம் தேடவே இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் என்றும் அபிஜித் பட்டாச்சார்யா பதிலளித்துள்ளார்.

Advertisement