கொரோனா அச்சம்: சிம்பிளாக முடிந்த உறியடி பட நடிகை திருமணம். மாப்பிள்ளை யார் தெரியுமா ?

0
3232
uriyadi
- Advertisement -

சில மாதங்களாக உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கரோனா வைரஸ். உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கரோனா வைரஸினால் 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Image result for uriyadi 2 movie actress

- Advertisement -

இந்தியா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால் திருமணம், விழா போன்ற பல நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், வரும் ஞாயிற்று கிழமை கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஞாயிறு அன்று மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : ரஞ்சித்துக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. திரௌபதி இயக்குனர் போட்ட டீவீட்டை பாருங்க

-விளம்பரம்-

இப்படி கொரோனாவால் பல்வேறு மக்களும் பதிக்கப்பட்ட நிலையில் யாரையும் அழைக்காமல் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் பிரபலநடிகையான விஸ்மயா . இவருக்கும் பிரபல மலையாள பாடகர் அபிஜித் என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கலந்து கொண்டு இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். நடிகை விஸ்மயா வேறு யாரும் இல்லை கடந்த ஆண்டு தமிழில் வெளியான உறியடி 2 படத்தில் நடித்தவர் தான்.

கொரோனா அச்சம்: யாரையும் அழைக்காமல் நடிகையைத் திருமணம் செய்து கொண்ட பிரபல பாடகர்!

ஏற்கனவே பிரபல மலையாள நடிகயான ஊர்மிளா அண்ணியின் மகள் உத்ரா உன்னி கொரோனா வைரஸ் அச்சத்தால் தன்னுடைய திருமண கொண்டாட்டங்களை தள்ளிவைத்திருந்தார் . இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்கூறி இருந்தது. , உலகில் பலர் இந்த கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த நிலைமை அமைதி அடையும் வரை எங்கள் திருமண கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க முடிவு செய்து உள்ளோம். திருமண தேதி அன்று கோவிலில் எளிமையாக தாலிகட்டு விழாவை நடத்துகிறோம்.

Image result for vismaya marriage

வரவேற்பு தேதி மற்றும் மற்ற தகவல்கள் எல்லாம் விரைவில் வெளியிடுகிறேன். எல்லோரும் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். உலகத்தை விரைவாக மீட்க விரும்புகிறேன் என கூறிஇருந்தார் . இப்படி உத்ரா உன்னி பதிவிட்ட ட்விட்டை பார்த்து பலரும் பாராட்டுகளை தெரிவித்துவந்தனர். தற்போது உத்ரா உன்னி பாணியில் நடிகை விஸ்மயாவும் கொரோனாவால் தனது திருமணத்தை சிம்பிளாக முடித்துள்ளார்.


Advertisement