ரஞ்சித்துக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. திரௌபதி இயக்குனர் போட்ட டீவீட்டை பாருங்க.

0
92441
ranjithmohan
- Advertisement -

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is paranjith190320_2.jpg

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். காலா படத்திற்கு பின்னர் இவருக்கு பாலிவூட்டிலும் அழைப்பு வந்தது. இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றறிந்த்து .

- Advertisement -

இதையும் பாருங்க : என்னை திருமணம் செய்து கொண்டு மூன்று முறை கருக்கலைப்பு செய்தார்- நடிகை மீது நடிகர் பகீர் புகார்

இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது. பா ரஞ்சித்தின் மனைவி மற்றும் குழந்தைகளை நாம் பார்த்துள்ளோம். இவர்கள் இருவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே இவர்களுக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது ரஞ்சித் இருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் ரஞ்சித்தின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஞ்சித்திற்கு திரௌபதி பட இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வாழ்த்துக்கள் பீம்ஜி, மிரிளன் அருமையான பெயர் என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரௌபதி ட்ரைலர் உருவானதிலிருந்து மோகனுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. மேலும், திரௌபதி படம் குறித்து ரஞ்சித்திடம் கருத்து கேட்ட போது கூட அவர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. இதனால் கடுப்பான மோகன், ரஞ்சித்திற்கு ட்விட்டரில் சவால் விட்டார். இப்படி இருக்க ரஞ்சித்திற்கு குழந்தை பிறந்ததை ஒட்டி மோகன் வாழ்த்து தெரிவித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement