‘முகத்தின் ஒரு பக்கம் அசைவில்லை’ பாடகர் ஜஸ்டின் பீபரருக்கு வந்த கொடிய நோய் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
434
Justin
- Advertisement -

பாடகர் ஜஸ்டின் பீபர் அவர்கள் ராம்சே ஹன்ட் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலமான பாடகராக திகழ்பவர் ஜஸ்டின் பீபர். இவர் கனடாவில் பிறந்தவர். தற்போது இவருக்கு 28 வயதாகிறது. திடீரென்று இவர் ராம்சே ஹன்ட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதாவது இது ஒரு முக பக்கவாதம் நோய். இதனால் இவர் பாட இருந்த பல நிகழ்ச்சிகளை ரத்து செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இது தொடர்பாக ஜஸ்டின் பீபர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு கூறி இருப்பது, புகைப்படத்தில் என் கண் இமைக்காமல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். என் முகத்தின் இந்த பக்கத்தில் என்னால் சிரிக்க முடியாது. ஏனெனில் என் முகத்தின் இந்தப்பக்கம் முழுதாக முடங்கி இருக்கிறது. ஏனென்றால், ராம்சே ஹன்ட் என்ற நோய் ஒருவர் காதுகளுக்கு அருகில் உள்ள நரம்பை பாதிக்கிறது.

- Advertisement -

ராம்சே ஹன்ட் நோயால் பாதிக்கப்பட்ட பாடகர்:

என் காது, முக நரம்புகளை தாக்கிய இந்த வைரஸால் தான் என் முகம் செயல் இழந்துள்ளது என்று கூறி இருக்கிறார். மேலும், இவர் இந்த வார நிகழ்ச்சிகளை ரத்து செய்து இது தொடர்பாக மூன்று நிமிட வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், தன்னுடைய ரசிகர்களை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் உடல் ரீதியாக வெளிப்படையாக செய்ய இயலாது. அடுத்து வரவிருக்கும் என்னுடைய நிகழ்ச்சிகளைப் பற்றி கூறியிருந்தார்.

ஜஸ்டின் பீபர் கூறியது:

அவரைப் பின்தொடரும் 240 மில்லியன் மக்களுக்கு சிரித்து கண் சிமிட்டி முகத்தின் வலது பக்கத்தை எப்படி அசைக்க முடியவில்லை என்றும் காட்டி இருக்கிறார். இது மிகவும் தீவிரமானது என்பதை நீங்கள் பார்க்க முடியும். இது இவ்வளவு தீவிரமாக இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நான் விரும்புகிறேன். ஆனால், என் உடல் நான் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நான் இந்த நேரத்தை ஓய்வெடுக்கவும், 100% மீண்டு வரவும் பயன்படுத்துகிறேன்.

-விளம்பரம்-

அமெரிக்கா மருத்துவர்கள் கூறியது:

அதன் மூலம் நான் எதற்காக பிறந்தேனோ அதை செய்ய முடியும். நான் இயல்பு நிலைக்கு திரும்ப முகத்திற்கு பயிற்சிகளை செய்து வருகிறேன். ஆனால், குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாது என்று கூறி இருக்கிறார். மேலும், இந்த நோய் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக் கூறியிருப்பது, வலி மிகுந்த அக்கி தவிர ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம், செவிப்புலன் இழப்பையும் முக வாதத்தையும் ஏற்படுத்தும்.

ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோயின் அறிகுறிகள்:

பெரும்பாலான மக்களுக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோயின் அறிகுறிகள் தற்காலிகமானது. ஆனால், நிரந்தரமானதாகவும் மாறலாம். நோயாளிகள் இமையை மூட முடியாமல் போவதையும் மங்களான பார்வையும் ஏற்படுத்தும். இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மிகவும் பொதுவானது என்று கூறியிருக்கிறார். இப்படி பாடகர் ஜஸ்டின் பீபர் பாதிக்கப்பட்ட நோய் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement