பாலியல் சர்ச்சையில் சிக்கிய பாடகர் – தவறாக பயன்படுத்திய புகைப்படம் – கடும் கோபத்தில் ஸ்ரீனிவாஸ்

0
1635
srinivas

ஹைதராபாத்தில் உள்ள பிரபல பாடகர் பெயர் கேசிராஜு ஸ்ரீனிவாஸ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் RJ’வாக வேலை செய்யும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தால் கைது செய்யப்பட்டார். இதனை பிரபல இணையதளம் செய்தியாக வெளியிட்டது.

srinivas

ஆனால் உண்மையான கேசிராஜு ஸ்ரீனிவாஸ்’ன் புகைப்படத்தை போடுவதற்கு பதிலாக பிரபல பாடகர் ஸ்ரீவாசின் புகைப்படத்தை போட்டு இவர் கைது செய்யட்டுள்ளார் என செய்தி வெளியிடப்பட்டது.

இதனை பார்த்து கடுப்பான பாடகர் ஸ்ரீனிவாஸ், இந்த மீடியா காரங்களுக்கு இதே வேலையா போச்சு. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட வேறு ஒரு பாடகர் ஸ்ரீனிவாஸ் இறந்தவிட்ட போது, நான் இருந்துவிட்டேன் என செய்தி வெளியிட்டது. தற்போது இந்த Indiatimes இணையதளம் இது போன்று செய்துள்ளது. உண்மையாகவே இதனை பார்க்கும் போது எனக்கு கடும் கோபம் ஏற்படுகிறது. சட்ட ரீதியாக அந்த இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க போகிறேன். தெரிந்தவர்கள் வழி சொல்லுங்கள் என கடுப்பாக தன் பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். தற்போது இந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.

அதை தொடர்ந்து அவர் மற்றொரு பதிவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது,என்னுடைய பெயர் ஸ்ரீனிவாஸ், நான் சென்னையை சேர்ந்த பாடகர்.
என்னுடைய பெயரை கொண்ட மற்றொரு பாடகர் ஹைதராபாதில் கைது செய்யப்பட்டுளார்,அதற்காக இந்தியா டைம்ஸ் என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுளீர்கள். எதற்காக நீங்கள் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

sriniva stwitter copy

இதற்கு பதிலளித்த இந்தியா டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தது. ‘இது தெரியாமல் நடந்த பிழை. அந்த பதிவை நீக்கிவிட்டோம். அதற்காக மன்னிப்பு வேண்டுகிறோம்’ என பதிவிட்டு பிரச்சையை முடித்தனர்.

indiatime apology

ஸ்ரீனிவாஸ் தமிழில், கிட்டத்தட்ட 2000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ரோஜா கூட்டம் படத்தில் ‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ’, உயிரே படத்தில் ‘என்னுயிரே என்னுயிரே’, ஜோடி படத்தில் ‘கை தட்டித்தட்டி’, படையப்பா படத்தில் ‘மின்சார பூவே’, காதலர் தினம் படத்தில் ‘நெனச்சபடி நெனச்சபடி’ ஆகிய பிரபலமான பாடல்களை பாபியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.