தெலுகு சினிமாவில் பிரபல பிண்ணனி பாடகியாக இருந்து வருபவர் சுனிதா. தெலுங்கில் பல படங்களில் பாடல்களை பாடியுள்ள இவர் தமிழில் ஏ ஆர் ரகுமான் , இளையராஜா போன்றவர்கள் இசையிலும் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார்.ஏற்கனவே திருமணமாகியுள்ள சுனிதா இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது 19 வயதிலேயே கிரண் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின்னர் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான சுனிதா சில வருடங்களிலேயே தனது கணவரை பிரிந்து விட்டார். பல ஆண்டுகள் ஆகியும் தனது கணவருடனுடன் மீண்டும் சேராமல் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 40 வயதாக்கும் சுனிதா இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளிக்கையில் “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ” என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்தி அதிகமாக பரவிக்கொண்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் முகநூல் பக்கத்தில் நேரலையில் “என்னக்கு திருமணம் செய்யும் எந்த ஒரு என்னமும் இல்லை, தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.