என்னது சிறகடிக்க ஆசை விஜயா மகனும் சீரியல் நடிகரா? அதுவும் விஜய் டிவி சீரியல் நடிகராமே.

0
472
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை விஜயா மகன் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்து தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் ஸ்ருதி -ரோகினிக்கு தாலி பிரித்து கொடுக்கும் பங்க்ஷன் நடைபெறுகிறது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

இந்த பங்க்ஷனில் ஸ்ருதி-ரவியை பிரித்து வர ஸ்ருதியின் அம்மா திட்டம் போடுகிறார். இனி வரும் நாட்களில் ஸ்ருதியின் அம்மா திட்டம் நிறைவடைந்தா? முத்து என்ன செய்தார்? போன்ற பல அதிரடி சுவாரசியங்களுடன் சிறகடிக்க சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் விஜயா கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அனிலா ஸ்ரீகுமார். இவர் மலையாள நடிகை ஆவார். தமிழிலும் இவர் சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அனிலா ஸ்ரீகுமார் குறித்த தகவல்:

இருந்தாலும், இவர் சிறகடிக்க ஆசை சீரியலின் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார். மேலும், இவர் அடிக்கடி சூட்டிங் பாட்டில் நடக்கும் நிகழ்வுகள், ரீல்ஸ் வீடியோக்கள் என அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். அந்த வகையில் இவரின் மகனும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பாரதிதாசன் காலனி என்று தொடரில் நடித்திருந்தார். அந்த சீரியல் ப்ரோமோ கூட பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

அனிலா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை அனிலா தன்னுடைய மகன் குறித்து கூறியிருந்தது, என்னுடைய மகனுக்கு சீரியலில் நடிக்கணும் என்று ரொம்ப நாள் ஆசை. அதுவும் தமிழ் சீரியல் தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால அவனுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பாரதிதாசன் காலனி என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த சீரியல் ஒளிபரப்பாகி சில மாதத்திலேயே முடித்து விட்டார்கள்.

மகன் குறித்து சொன்னது:

என் மகனும் நானும் சீரியலில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்போம். மலையாளத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஷார்ட் பிலிம் நடித்திருக்கிறோம். அப்போது அந்த ஷார்ட் பிலிம்யில், என்னுடைய மகன் இறந்து போன மாதிரி ஒரு காட்சி வரும். அதற்கு நான் அழுது அழுது கொண்டிருப்பேன். பின் நான் நடித்து முடித்து அடுத்த சூட்டிங்கிற்கு சென்று விட்டேன். ஆனால், என் மகன் அந்த காட்சியை பார்த்துவிட்டு என்னை ரொம்பவே தேடினான். என்னை பார்க்க வேண்டும் என்று அழுதான். அந்தளவுக்கு என் மகனுக்கு என் மீது அதிக பாசம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement