விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண் இடம் சீதா தன் அக்காவுக்காக பண உதவி கேட்டார். அருணுமே மறுப்பு தெரிவிக்காமல் உதவி செய்ய ஒத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து குடித்திருந்ததால் மீனா கோபப்பட்டு பேசாமல் இருந்தார். ரவி, முத்துவிற்கு அட்வைஸ் செய்தார். இருந்துமே முத்து கேட்டுக் கொள்ளவில்லை. பின் மீனா, சீதாவை பார்க்க கிளம்பி வந்தார். அப்போது சீதா, பணம் ரெடி பண்ண விஷயத்தை சொல்லி தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டார். இதனால் மீனா ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ஹோட்டலில் சுருதி வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த ரெண்டு நபர்கள் ரொம்ப மோசமாக ஸ்ருதியிடம் பேசி இருந்தார்கள்.

இதனால் கோபப்பட்ட ஸ்ருதி அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மிளகாய் பொடியை போட்டுக் கொடுத்து விட்டார். அவர்கள் சாப்பிட்ட உடன் ஹோட்டலையும் சுருதியையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நீத்து, ரவி இருவருமே என்ன நடந்தது? என்று விசாரிக்காமல் சுருதியை தான் திட்டி இருந்தார்கள். இதனால் சுருதிக்கு பயங்கர கோபம் வந்தது . இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் உடல்நிலை முடியாமல் அவஸ்தைப் பெற்றுக் கொண்டிருந்தார். இதை அறிந்த ரோகினி அவருக்கு மாத்திரை கொடுத்து உதவி செய்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினி ரொம்ப எமோஷனலாக மனோஜிடம் பேசி இருந்தார். இருந்தாலுமே, மனோஜ் தன் அம்மா மீது இருந்த பயத்தில் ரோகினி இடம் சரியாக பேசவே இல்லை. இன்னொரு பக்கம் மீனா, முத்து வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை, முத்துவிற்கு ஃபோன் செய்து பேசு என்று அறிவுரை செய்தார். முத்து சவாரிக்கு போவதால் வர முடியாது என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் சுருதி ரெஸ்டாரண்டில் நடந்ததை நினைத்து ரவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
அப்போது போன் செய்த நீத்து, நான் அங்கு ஓனராக நடந்து விட்டேன். நீங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று மன்னிப்பு கேட்டார். இதை கேட்டவுடன் ரவிக்கு எதுவும் பேச முடியவில்லை. பின் சுருதி, ரவி இடையே இருந்த சண்டையும் நார்மல் ஆகிவிட்டது. மறுநாள் காலையில் ரோகினி, மனோஜ்காக கஞ்சி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து விஜயா, எதற்கு என்று கேட்க, மனோஜ்க்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார். பின் மனோஜை பார்த்து விஜயா பேசுகிறார். அப்போது மனோஜ், ரோகினி இடம் பேசாததால் தான் எனக்கு காய்ச்சல் வந்திருக்குமோ? என்று சொன்னார். உடனே கோபப்பட்ட விஜயா, மனோஜை திட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி வருத்தப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிடம் சரியாக பேசாமல் அவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார். ஆனால், மீனா அதைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடைய ஆர்டருக்கு பணத்தை கொடுப்பதற்காக ரெடியாகிறார். பின் அண்ணாமலையிடம் பணத்தை ரெடி பண்ணி விட்டேன், கொடுத்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி மீனா கிளம்புகிறார். இதை பார்த்த விஜயா, சிந்தாமணிக்கு போன் செய்து மீனா பணத்தை ரெடி பண்ண விஷயத்தை சொல்கிறார். இதனால் கோபத்தில் சிந்தாமணி தன்னுடைய ஆட்களை வைத்து மீனாவின் பணத்தை திருட திட்டம் போடுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் மண்டபத்திற்கு வந்த மீனாவிடம் சிந்தாமணியின் ஆட்கள் பணத்தை திருடி விடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் மீனாவையும் கீழே தள்ளி விடுவதால் அவருக்கு கையில் அடியும் படுகிறது. பின் அங்கு வந்த மீனாவின் தோழிகள் தான் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள். இந்த தகவலை அறிந்த முத்து ஹாஸ்பிடலுக்கு உடனே வருகிறார். மீனாவும் எமோஷனலாக முத்துவை கட்டிப்பிடித்து நடந்ததை சொல்லி அழுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு முத்து, மீனாவை அழைத்து வருகிறார். மீனாவிற்கு அடிபட்டதை பார்த்து எல்லோரும் விசாரிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






