சிட்டியால் மீண்டும் சத்யாவுடன் மோதும் முத்து, புது சிக்கலில் மாட்ட போகும் மனோஜ்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
336
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து மீனா ஸ்வீட் செய்து எல்லோருக்கும் கொடுத்து ரோகினி கர்ப்பம் என்று சொல்லி இருந்தார். உடனே வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டு இருந்தார்கள். ஆனால், ரோகினி அதிர்ச்சியாகி, நான் கர்ப்பமாகவே இல்லை என்று கோபமாக பேசி இருந்தார். அதன் பின் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து இருந்தார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். அதற்குப் பின் ஒவ்வொரு ஜோடியையும் மேடையில் அமர வைத்து தங்கள் மனதில் தோன்றும் விஷயத்தை பேச சொன்னார்கள். அப்போது மீனா- முத்து பேசியதை கேட்டு அரங்கமே கைதட்டி இருந்தது. அதற்குப் பின் ஒவ்வொருவரின் சம்பளத்தை பற்றி கேட்க மனோஜ் திமிராக பேசி இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

சுருதி-ரவி, முத்து- மீனா இருவருமே தங்களுடைய சம்பளத்தையும், அதை செலவு செய்யும் விதத்தையும் பற்றி கூறியதைக் கேட்டு நடுவர்களே கிளாப் செய்திருந்தார்கள். மூன்றாவது சுற்றில், சந்தோசமாக வாழ்வதற்கு என்ன தேவை என்ற சொன்னவுடன் ஒவ்வொரு ஜோடியும் தனித்தனியாக டிஸ்கஸ் செய்தார்கள். அப்போது மனோஜ் வழக்கம் போல் குருட்டுத்தனமாக யோசித்து ரோகினி இடம் சொல்வதை நடுவர்கள் கேட்டு இருந்தார்கள். இறுதியில் வெற்றியாளர் குறித்து சொல்லும் போது, மனோஜ் ஆணவமாக பேசி இருந்த ஃபுட்டேஜை நடுவர்கள் போட்டு காண்பித்தவுடன் அவருக்கு முகமே இல்லை.

சீரியல் கதை:

கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவித்தார்கள். பின் முத்து- மீனா மாலையும், மேல தாளத்துடன் வந்தவுடன் விஜயாவிற்கு முகமே மாறிவிட்டது. பின் தாங்கள் வெற்றி பெற்ற பணத்தை அப்பாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி அங்கு நடந்ததை சொல்லி இருந்தார் முத்து. நேற்று எபிசோடில், ஒவ்வொரு ஜோடியும் போட்டியில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் மேஸ்திரியை கூட்டிட்டு வந்து எவ்வளவு பணமாகும், என்னென்ன பண்ணலாம் என்று முத்து பிளான் போட்டார்கள். அப்போது வீடு கட்ட 4 லட்சம் ஆகும் என்று சொன்னவுடன் இருவரின் முகமும் மாறிவிட்டது.

-விளம்பரம்-

இன்று எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் மனோஜ் தன்னுடைய அம்மாவிற்கு காஸ்ட்லியான புடவை, தன்னுடைய மனைவிக்கு தங்க தாலி கொடி, தனக்கு 51,000 ரூபாயில் வாட்ச் என்று வாங்கி இருக்கிறார். பின் தன் அப்பாவுக்கு ஒரு துண்டைக் கொண்டு வந்து கொடுக்க, முத்து கோபப்பட்டு மனோஜ் இடம் சண்டை போட்டார். பின் ரோகினி இதையெல்லாம் எப்படி வாங்கினாய்? என்று கேட்டதற்கு, கிரெடிட் கார்டு பணத்தில் வாங்கினேன் என்று சொன்னவுடன் ரோகினிக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், தனக்கு தாலிக்கொடி கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் முத்து, ஒரு நபரை சவாரிக்கு அழைத்து வந்திருக்கிறார். அந்த நபருடைய வீட்டில் சிட்டியும் சத்யாவும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அந்த நபரும் வீட்டுக்கு போய், நான் வட்டி சரியாக தானே கட்டுகிறேன். ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று கேட்க, சிட்டி மோசமாக நடந்திருக்கிறார். இதை பார்த்த முத்து, மொபைலில் ரெக்கார்ட் செய்து அங்கிருந்த சிலரை அடித்து விடுகிறார். பின் ஒழுங்கு மரியாதையாக அவர்களை தொந்தரவு செய்யாதே, அவர்கள் அசலை மட்டும் கொடுப்பார்கள். ப்ரச்சனை செய்தால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று ஒரு பேப்பரில் எழுதி சிட்டி, சத்யாவிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார் முத்து. இதை எல்லாம் பார்த்து சிட்டிக்கு முத்து மேல் பயங்கர கோபம் வருகிறது. பின் அந்த நபர் முத்துவுக்கு நன்றி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement