முத்துவின் காரிலேயே ஏறிய ஜீவா, பரிகாரம் என்ற பெயரில் ரோகினியை பாடாய் படுத்திய விஜயா.

0
66
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. விஜயாவின் சதியால் மீனா நடத்தி வந்த தள்ளுவண்டி கடையை அதிகாரிகள் வந்து கொண்டு சென்றுவிட்டனர். மீனா எவ்வளவோ கெஞ்சியும் அவரது கடையை அதிகாரிகள் வேனில் ஏற்றி கொண்டு சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்து போன மீனா, இனி வீட்டில் இருக்கும் வேலைகளை செய்துகொண்டு வீட்டிலேயே இருக்கிறேன் என்று கண்ணீருடன் புலம்புகிறார்.

-விளம்பரம்-

இதனை கண்டு விஜயாவும் ரோகினியும் ஆனந்தம் கொள்கின்றனர். இன்றைய எபிசோடில் ரோகினியும் விஜயாவும் மீனாவை அழைத்து டீ போட சொல்கிறார். இதனால் கிட்சனுக்குள் சென்று கண்ணீர்விட்டு அழுகிறார் மீனா. கடை போனதால் மீனா கலங்கி நின்றுகொண்டு இருக்க, முத்து ஒரு புதிய பைக்கை வாங்கி வந்து மீனாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். மேலும், இனி வண்டியிலேயே மீனா பூ விற்கலாம் என்று மீனாவை வண்டியில் அழைத்து செல்கிறார் முத்து.

- Advertisement -

அதுவும் மீனாவிற்கு பிடித்த சாம்பல் நிற கலரில் வண்டியை வாங்கி வந்து மீனாவின் முன் வந்து நிற்கிறார் முத்து. இனி இதனால் மீண்டும் மீனா தன்னம்பிக்கையை பெறுகிறார். முத்து, மீனாவிற்க்கு பைக் வாங்கி கொடுத்ததை பார்த்து விஜயா, மனோஜ், ரோகிணி ஆகிய அனைவரும் வயிற்றெரிச்ச்சள் படுகின்றனர். இதுவும் மனோஜ், ரோகிணியிடம் அவங்க ரெண்டு பேரும் என்னை விட படிக்காதவர்கள் அவங்களுக்கு எல்லாம் நடக்குது. எனக்கு மட்டும் நடக்க மாட்டுது என்று புலம்புகிறார். இதற்கு ரோகிணி, அவங்க ரெண்டு பேரும் வேலை செய்கிறார்கள் அதான் எல்லாம் நடக்குது என்று கூறுகிறார்.

இதனால் கோபமடைந்த மனோஜ், அப்போ நான் வேலைக்கு போகவில்லை என்று குத்திக்காட்றியா என்று கோபம் கொள்கிறார். இதனால் மனோஜை, ரோகிணி சமாதானம் செய்கிறார்.இதெற்கெல்லாம் ஒரே வழி நீ தொலைத்த 27 லட்சம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜீவாவை கண்டுபிடித்து எப்படியாவது அவள் கொண்டு சென்ற பணத்தை வாங்க வேண்டும் என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

முதலில் அவள் கனடாவில் எங்கு இருக்கிறாள் என்று அவளை அனுப்பி வைத்த ஏஜென்சியிடம் சென்று விசாரிக்கலாம்’ என்று மனோஜிற்கு யோசனை கூறுகிறார். ஆனால், ஏஜென்ஸியில் ஜீவாவின் விவரத்தை தர மறுத்துவிட்டனர். இப்படி ஒரு நிலையில் கனடாவில் இருந்து சென்னை வந்துள்ள ஜீவா முத்துவின் காரிலேயே பயணித்து கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சிறையில் இருக்கும் ரோகினியின் தந்தை வெளியில் வர நேர்த்திக்கடன் செய்ய வேண்டும் 48 நாள் தரையில பாய போட்டு படுக்கனும், ஒரு நேரம் சாப்பிட வேண்டும் விஜயா கூறுகிறார்.

அப்போது மீனா, ரோகிணி மலேசியாவில் வளர்ந்த பொண்ணு என்று சொன்னீங்க அவங்களால இந்த பரிகாரத்தை செய்ய முடியுமா?  ஒழுங்கா பரிகாரம் செய்ய இல்லாட்டி சாமி குத்தமா போய்டும் என்று சொல்ல, பெற்ற அப்பாவுக்காக இது கூட செய்ய மாட்டாவா என்று ரோகினியின் வாயை விஜயா அடைக்கிறார். இதனிடையே ஜீவாவுடன் காரில் பயணித்து கொண்டு இருக்கும் முத்து ஜீவாவிடம் ஒரு பத்து நிமிஷம் தான் போற வழியில கோயிலுக்கு போயிட்டு வரவா என கேட்க, சென்னையில் உங்க கார்ல தான் நான் வரப்போகிறேன். அதனால நீங்க போயிட்டு வாங்க என ஜீவா  சொல்லுகிறார்.இதனை தொடர்ந்து ரோகிணி புடவை கட்டி அவருக்கு தலையில் தண்ணீர் ஊற்றி மாலை போட்டு பரிகாரம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள்.

Advertisement