மனோஜ் செய்த அட்ராசிட்டியால் பதறி போகும் மொத்த குடும்பம், முத்து செய்த வேலை – சிறகடிக்க ஆசை

0
216
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவிற்கு வேறொரு புதிய ஆர்டர் கிடைத்தது. ஆனால், அதை கிடைக்க விடாமல் சிந்தாமணி தடுத்து விட்டார். இதனால் கவலையில் மீனா அங்கிருந்து வந்து விட்டார். இன்னொரு பக்கம் புது பங்களாவை பார்க்க போவதற்காக விஜயா அலப்பறை செய்து இருந்தார். பின் எல்லோரும் மனோஜின் புது பங்களா வீட்டிற்கு போனார்கள். வீட்டிற்குள் நுழைந்த உடனே விஜயா சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். அப்போது அந்த வீட்டினுடைய போலி ஓனர்கள், மனோஜிடம் மீதி பணத்தை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்கள்.

-விளம்பரம்-

அந்த சமயம் முத்துவின் கார் உள்ளே வந்தவுடன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால், ஏதேதோ சொல்லி அந்த போலி ஓனர் தப்பித்து விட்டார். அப்போது மனோஜ், இவர்தான் இந்த பங்களாவின் ஓனர் என்று சொன்னவுடன் முத்துவிற்கு சந்தேகம் வந்தது. அப்போது அவர், இவ்வளவு பெரிய பங்களாவுக்கு ஓனராக இருந்து ஒரு வாடகை காரில் வருவானா? என்று நக்கலாக கேட்க, ஏதோ ஒன்று சொல்லி சமாளித்தார் விஜயா. இருந்தாலுமே முத்துவிற்கு அந்த ஓனர் மீதும், பங்களா மீதும் நிறைய சந்தேகம் எழுந்தது. பின் எல்லோருமே பங்களாவை சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோடில் வீட்டிற்கு பெயர் வைக்க நியூமராலஜிஸ்ட்டை வரவைத்தார்கள். இதை பார்த்து முத்து, ரவி கிண்டல் செய்தார்கள். பின் அந்த நபர் விஜயாவிற்கு ஐஸ் வைத்துவிட்டு எல்லோருடைய பெயரைக் கேட்டு விட்டு, ரோஜா இல்லம் என்று சொன்னார். அதற்கு முத்து, மீனா உனக்கேற்ற பெயர்தான் என்று சொன்னவுடன் மனோஜ்- விஜயாவும் வேணாம் என்றார்கள். அதற்கு பின் மனோஜ்-ம,ரோகினி-ரோ,விஜயா-யா எழுத்து எடுத்து பெயர் வையுங்கள். ‘ரோமயா’ அருமையாக இருக்கும் என்று சொன்னவுடன் அண்ணாமலை, முத்து சிரித்தார்கள்.

நேற்று எபிசோட்:

சந்தோஷத்தில் விஜயா, ரோமயா என்று கத்தி இருந்தார். அதே பெயரை வீட்டிற்கு வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அதற்கு பின் அங்கு வந்த பார்வதி, வீட்டை பார்த்து புகழ்ந்து பேசி இருந்தார். பின் வீட்டில் பேய் இருக்கிறதா? என்று சோதனை செய்ய வேறொரு பெண் மந்திரவாதி ஒருவரை வர வைத்தார்கள். இதெல்லாம் பார்த்து முத்து கிண்டல் செய்தார். பின் அந்தப் பெண் மந்திரவாதி வீட்டிற்குள் வந்தார். அவருடைய கெட்டப் எல்லாம் பார்த்து விஜயா பயந்து விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பேய் விரட்டும் பெண் மந்திரவாதி வந்தவுடன் எல்லோருமே பயத்தில் இருக்கிறார்கள். அவர் எல்லா லைட்டை போட சொல்லி கண்ணை மூடி, கையை தூக்கி நிற்கிறார். எல்லோருமே ஒவ்வொரு கமெண்ட் கொடுக்கிறார்கள். ஆனால், அவர் எதையுமே கண்டுகொள்ளவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லா லைட்டுகளுமே ஆடுகிறது, ஜன்னல் கதவெல்லாம் சத்தம் கேட்கிறது. இதனால் எல்லோருமே பேய் தான் இருக்கிறது என்று பயந்து விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

உடனே எல்லா லைட்டும் அணைந்து விடுகிறது. இதனால் எல்லாருமே பயப்பட, நான் தான் மெயின் ஆஃப் பண்ணேன் என்று முத்து சொன்னார். இருந்தாலுமே அந்த மந்திரவாதி எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். ஸ்ருதி – முத்து இருவருமே மாத்தி மாத்தி கமெண்ட் போட்டுக் கொண்டே இருந்தார்கள். கடைசியில் அவர், இங்கு பேயில்லை என்று சொல்லி பணம் கேட்க, மனோஜ் கொடுத்து விடுகிறார். மனோஜ் அடுத்து என்ன செய்ய போகிறான்? என்று கலவரத்தில் மொத்த குடும்பமும் இருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement