விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினியை பற்றி மீனா வீட்டில் சொன்னவுடன் விஜயா கோபத்தில் சண்டை போட்டார். பின் ரோகினி சொன்ன கதையை எல்லோருமே நம்பி விடுகிறார்கள். இதை எல்லாம் மீனா தான் சொன்னார் என்றவுடன் விஜயா பயங்கரமாக திட்டி பேசி இருந்தார். கடந்த வாரம் மீனா-சுருதி இருவருமே உட்கார்ந்து பேய் படம் பார்க்க, பயத்தில் மீனா கத்தினார். இதை பார்த்த விஜயா கிண்டலாக பேச, உடனே சுருதி, விஜயாவிற்கு பயத்தை காண்பிக்க, பேய் போல் பயங்கரமாக சவுண்ட் எபெக்ட் எல்லாம் வைத்து பயமுறுத்தி இருந்தார்.
பின் சுருதி செய்த வேலை என்று தெரிந்தவுடன் விஜயா, மீனாவை தான் திட்டி இருந்தார். மறுநாள் ஸ்ருதி, மீனாவை இடித்ததால் கையில் இருந்த எண்ணெய் கீழே விழுந்தது. அந்த சமயம் வந்த விஜயா வழுக்கி விழுந்தார். ஆனால், அதற்கு காரணம் மீனா என்று திட்டி இருந்தார். இதை எல்லாம் பார்த்த சுருதி, விஜயாவை திட்டி விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி -மனோஜ் இருவருமே விஜயாவை ஏற்றி விட்டார்கள். விஜயாவிற்கு கோபம் வந்து அவருடைய அம்மாவிற்கு போன் செய்து வர வைத்து நடந்ததை சொன்னார். உடனே ஆத்திரத்தில் அவர் மீனாவை பார்த்து ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதன்பின் முத்துவிடம் நடந்ததை மீனா சொல்ல, அவர் கோபமாக வீட்டிற்கு வந்தார். பின் ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். மேலும், அண்ணாமலை, எதற்கு இப்படி சண்டை போடுகிறீர்கள்? என்று முத்துவிடம் கேட்க, முத்து நடந்ததை பற்றியும், தன் அம்மா போட்ட திட்டத்தையும் சொன்னார். அதற்கு அண்ணாமலை, தேவையில்லாமல் இதை வைத்து வீட்டில் ஒரு சண்டை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போயிருந்தார்.
சீரியல் கதை:
அப்போது மருத்துவர், அவருடைய நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது என்று சொன்னவுடன் ரோகினி வருத்தப்பட்டு ஆறுதல் சொன்னார். நேற்று எபிசோடில் முத்து சவாரியில் ஒரு நபரை அழைத்துக் கொண்டு வந்தார். அந்த சமயம் பார்த்து மீனாவின் ஸ்கூட்டி, முத்து கார் மீது மோத, ஏதோ தெரியாத நபர்கள் போல இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள் . அப்போது போலீஸ் வந்து விசாரிக்க உடனே முத்து, இவர் என் மனைவி என்று சொல்ல, சவாரி வந்த நபர், நீங்கள் சொன்ன பேயாட்டம் பொண்ணு இவர் தானா? என்று கேட்டவுடன் மீனாவிற்கு பயங்கர கோபம் வந்து விடுகிறது.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் ரோகினிக்கு மனோஜ்க்கு போன் செய்து பேச, வித்யா உடன் இருக்கிறேன் என்று ரோகினி சொன்னார். அந்த சமயம் பார்த்து ஷோரூமுக்கு வித்யா போனார். உடனே மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது. இதை ரோகினி போனில் வித்யாவிடம் சொல்ல, என்னென்னவோ பொய் சொல்லி சென்று விடுகிறார். இருந்தும், மனோஜுக்கு ரோகினி மேல அதிக சந்தேகம் வருகிறது. மீனாவை சமாதானம் செய்ய முத்து பல ராஜதந்திர வேலைகலை செய்தார். இருந்தும் மீனா மனம் மாறவில்லை. இன்றைய எபிசோடில், முத்து வெள்ளைக்கொடி காட்டி சமாதானம் செய்ய மீனா சண்டை போடுகிறார்.
இன்றைய எபிசோட்:
கடைசியில் அல்வா கொடுத்து முத்து ஏதேதோ பேசி மீனாவை சமாளித்து விடுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ், என்னிடம் பொய் சொல்லி எங்கே போனாய்? என்ன மறைக்கிறாய்? என்று கேட்க, உனக்கு கருங்காலி மாலை வாங்க போனேன் என்று ரோகினி சமாளிக்கிறார். இருந்தும் மனோஜ் நம்பவில்லை. வழக்கம்போல் ரோகினி ஏதேதோ ட்ராமா செய்து மனோஜை நம்ப வைக்கிறார். அடுத்த நாள் காலையில் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாட்டி, கடலை மூட்டை அனுப்பி வைத்திருக்கிறார். எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்கிறோம் என்று சொன்னவுடன் மீனா, கிரிஷ்க்கு கொஞ்சம் எடுத்து கொள்கிறேன் என்றவுடன் ரோகினி பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது