ரோகினியின் உண்மை முகத்தை அறிந்த மீனா, முத்துவுக்கு தெரிய வருமா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
483
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடந்ததால் எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து இருந்தார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். அப்போது மீனா- முத்து பேசியதை கேட்டு அரங்கமே கைதட்டி இருந்தது. இறுதி சுற்றில், மனோஜின் முட்டாள் தனத்தால் நடுவர்களிடம் அசிங்கம் பட்டார். கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவித்தார்கள்.

-விளம்பரம்-

அதன் பின் முத்து- மீனா மாலை, மேல தாளத்துடன் வந்தவுடன் விஜயாவிற்கு முகமே மாறிவிட்டது. மறுநாள் மனோஜ், பேங்கில் வந்த கிரிடிட் கார்ட் பணத்தை வைத்து தன்னுடைய அம்மாவிற்கு காஸ்ட்லியான புடவை, மனைவிக்கு தங்க தாலி கொடி, தனக்கு 51,000 ரூபாயில் வாட்ச் என்று வாங்கி இருந்தார். ஆனால், தன் அப்பாவுக்கு ஒரு துண்டைக் கொண்டு வந்து கொடுத்தார். பின் முத்து, சவாரி சென்ற இடத்தில் சிட்டி-சத்யா உடன் சண்டை நடந்தது. இந்த வாரம், சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் கோவிலில் கூல் ஊத்த இருப்பதாக மீனாவிடம் சொன்னார்கள். ஆனால், உன்னுடைய புருஷன் வரக்கூடாது என்று சத்யா சொன்னதால் எப்படி சொல்வது என்று தயங்கி இருந்தார் மீனா.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இதை முத்து கண்டுபிடித்து, நீ போகவே கூடாது என்று சொல்ல, மீனாவும் தன்னுடைய அம்மாவின் கட்டாயத்தால் கோவிலுக்கு போய் இருந்தார். இதையெல்லாம் விஜயா பார்த்து முத்துவிடம் சொல்ல, அவர் கோயிலுக்கு போனார். அங்கு முத்துவை பார்த்த மீனா, அதிர்ச்சியாகி நிற்க, முத்துவும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு வந்து விட்டார். கடைசியில் முத்து, குடித்து விட்டு வந்து மீனாவிடம் சண்டை போட்டார். இதை பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். போதை தெளிந்து முத்து, மீனாவிடம் பேசாமல் கோபப்பட்டு சென்று விட்டார்.

சீரியல் கதை:

பின் முத்து வேலை செய்யும் இடத்திற்கு வந்த மீனாவின் அம்மா, தங்கை இருவருமே மன்னிப்பு கேட்க, முத்து கோபமாக பேசி இருந்தார். அப்போது சத்யா பற்றி சொல்ல வந்தார். இருந்தும் மறைத்து விட்டார். மீனா தரப்பு நியாயத்தை அவர்கள் இருவரும் பேச முத்து ஏற்று கொள்ளாமல் கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார். நேற்று எபிசோடில், முத்து சவாரியில் ஒருவரை ஏற்றிக் கொண்டு செல்லும் போது மீனாவின் நிலைமை புரிந்து கொள்கிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிற்கு அல்வா கொடுத்து மன்னிப்பு கேட்கிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

பின் ஆசையாக சமைத்து வைத்த உணவை சாப்பிட்டு முத்து-மீனா சந்தோசமாக பேசி இருந்தார்கள். இதை பார்த்து விஜயா வயிறு எறிகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், விஜயா, மனோஜ் காலில் அடிபட்டதால் கட்டிலை தூக்கி வெளியே போடு என்று சண்டை போடுகிறார். ஆனால் ,முத்து- மீனா முடியாது என்றும், மேலே ரூம் கட்டு வரை இங்கே தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள். பின் சீதா வேலை செய்யும் இடத்திற்கு மீனா செல்கிறார். அந்த சமயம் பார்த்து ரோகினி ஹாஸ்பிடலுக்கு வருகிறார். சீதா- மீனா இருவருமே ரோஹினியை பார்க்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:

மேலும், சீதா, ரோகினியை பற்றி விசாரிக்கிறார். அப்போது தான் ரோகினி இரண்டாவது குழந்தைக்கான டெஸ்ட்டுக்கு வந்திருக்கிறார் என்று சொல்ல மீனாவும் அதிர்ச்சியாகி உறைந்து போய் வீட்டிற்கு வந்திருக்கிறார். யார் எது சொன்னாலும் காதில் கேட்காமல் அமைதியாகவே மீனா இருக்கிறார். கடைசியில் ரோகினி- மனோஜ் இருவரும் ஸ்வீட் கொண்டு வந்து தந்தவுடன் இந்த விஜயா ரோகினி கர்ப்பமாக தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறார். ஆனால், ஷோரூமில் நல்ல வியாபாரம் ஆகிறது என்று சொன்னவுடன் வீட்டிற்கு குழந்தை வந்தால் தானே நன்றாக இருக்கும் என்று விஜயா சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement