விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்துவின் வீட்டிற்கு வந்த நீத்து, புதிய ரெஸ்டாரன்ட் தொடங்குகிறேன். அதற்கு ஷேர் பார்ட்னர் ரவி தான். அதற்கான டாக்குமெண்ட்டில் ரவி சைன் போட்டால் போதும். ரெஸ்டாரன்ட் வெற்றிக்கு நான் மட்டும் காரணம் இல்ல ரவியும் ஒரு முக்கிய காரணம். சுருதி சொன்னது சரி தான் என்று பேசி இருந்தார். ரவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் சுருதி- ரவி இருவருமே தனியாக சென்று ரெஸ்டாரன்ட் பற்றி பேசி இருந்தார்கள். அப்போது விஜயா, ரெஸ்டாரண்டிற்கு எவ்வளவு செலவாகும் என்றெல்லாம் கேட்டார்.

எங்களுக்கு சென்னையில் மட்டும் இல்லை மும்பையிலும் 10 பிரான்ச் இருக்கிறது என்று சொன்னவுடன் விஜயா வாயை பிளந்தார். உடனே விஜயா, ரோகினியை கழட்டி விட்டு எப்படியாவது நீத்துவை மனோஜிற்கு திருமணம் செய்து வைக்க யோசித்தார். பின் ரவியும் விருப்பமே இல்லாமல் டாக்குமெண்டில் சைன் போட்டார். இன்னொரு பக்கம் சீதா அருணை நினைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சத்யா, சீதாவின் திருமணத்தை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேச, அவர் மாப்பிள்ளை முடிவு தான் என்னுடைய முடிவு என்றார். மீனாவும் எடுத்துச் சொல்லிப் பார்த்தார். ஆனால், சீதாவின் அம்மா மனமே மாறவில்லை.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அருணின் அம்மா, மீனாவிடம் சீதாவை திருமணம் செய்து வைப்பது பற்றி பேசி இருந்தார். மீனா, எவ்வளவு சொல்லியும் என் கணவர் கேட்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை என்றார். அருண் அம்மா, என் வீட்டு மருமகள் சீதா தான் என்று ஆணித்தனமாக சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் ரோகினி, தன்னுடைய பாய் பிரண்டை சந்திக்க போவதாக பொய் சொல்லி அழகாக மேக்கப் போட்டு தயாராகி மனோஜை வெறுப்பேற்றி இருந்தார். இது எல்லாம் பார்த்த மனோஜ் கவலையாக இருந்தார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதி இடம் நீத்துவை பற்றி சொன்னார்.

நேற்று எபிசோட்:
பின் எப்படியாவது ரோகிணிக்கு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு மனோஜை நீத்துவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டார். கடைசியில் வீட்டிற்கு வந்த முத்துவிடம் மீனா, திருமணத்தில் சீதாவும், அம்மாவும் உங்களுடைய விருப்பம் தான் முக்கியம் என்று சொன்னார்கள். உங்களை மீறி இந்த திருமணம் நடந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். உடனே முத்து, அப்படியா! திருமணம் நடக்கட்டும். உனக்கும் எனக்கும் உறவு முடிந்துவிடும். உங்கள் குடும்பத்திற்குமான உறவு முடிந்துவிடும். நீ இந்த வீட்டு மருமகள் மட்டும்தான். இந்த முத்துவின் பாசம் கிடைக்காது என்று சொன்னார். மீனாவால் எதுவுமே பேச முடியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, தன் நண்பரை சந்திக்க போவதாக மனோஜ் இடம் சொல்கிறார். இதனால் அந்த நண்பன் யார் என்று தெரிந்து கொள்ள மனோஜ், ரோகினியை பின்தொடர்ந்தே போகிறார். ரோகினி ஒரு பேக்கரியில் கேக் வாங்கினார். அதையெல்லாம் பார்த்த மனோஜ், பேக்கரியில் விசாரித்து கொள்கிறார். இன்னொரு பக்கம் மீனா சொன்ன வார்த்தையால் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது அவர் விஜயாவிடம் ஜாலியாக வம்பு இழுத்துக் கொண்டு இருக்கிறார். முத்து தன்னுடைய அம்மாவை புகழ்ந்து பாடி ஆட்டமெல்லாம் போடுகிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது அண்ணாமலை வெளியே வந்தவுடன் ஒரு கோட்டைக் கிழித்து அம்மாவை தாண்ட சொல்கிறார் முத்து. உடனே அண்ணாமலை தாண்ட வேண்டாம் என்றவுடன் விஜயாவும் அமைதியாகி விடுகிறார். முத்து, இதற்கு தான் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். கணவன் சொன்ன ஒரு வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறார் என்று மீனாவை குறை சொல்கிறார். மறுநாள் காலையில் அண்ணாமலை, மீனாவிடம் முத்து குடித்து வந்ததை பற்றி விசாரிக்கிறார். அப்போது மீனா, சீதா காதலிக்கும் விஷயம் பற்றி சொல்கிறார். உடனே அண்ணாமலை, சீதாவிற்கு பிடித்து இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






