விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் முத்து, மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போயி தத்தெடுப்பது பற்றி பேச, ரோகினி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கடைசியில் முத்து, யோசித்து முடிவெடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்ப, இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொன்னவுடன் ரோகினி ஆவேசப்பட்டு கத்தி இருந்தார். பின் முத்து- மீனா இருவருமே கிரிஷ்யை தத்தெடுப்பது பற்றி அண்ணாமலையிடம் பேச, அவர் வீட்டில் எல்லோரிடமும் பேசி முடிவெடுக்கலாம் என்று சொல்லி இருந்தார். இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகினி, விஜயாவிடம் சொல்லி ஏத்தி விட்டார்.

இந்த வாரம் மீனாவை சமைத்து பார்வதி வீட்டிற்கு சாப்பாடு எடுத்து வர வேண்டும் என்று விஜயா சொல்ல , முத்துவுக்கு கோபம் வந்து சண்டை போட்டார். அப்போது அண்ணாமலை, நானே சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னவுடன் மீனா, நான் கொண்டு போகிறேன் என்று சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் கடையில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் லெட்டர் கொண்டு வந்து கொடுத்து படிக்கச் சொல்லி மறைந்து விட்டார். அந்த கடிதத்தில் உன் தம்பி கொலையாளி ஆவான், நீ தற்கொலை செய்து கொள்வாய் என்று இருந்ததை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து அந்த நம்பரை தேடி போனார். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம், மீனா தன்னுடைய மாமியாருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் முதியவர்கள் பசியால் இருந்ததால் அவர்களுக்கு போட்டு விட்டு விஜயாவிற்கு பிரியாணி வாங்கி கொண்டு போய் மீனா கொடுத்தார். குறை சொல்லி விட்டு சாப்பிட்டார். ஆனால் , விஜயாவிற்கு பிரியாணி சாப்பிட்டது ஜீரணம் ஆகாமல் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க, அண்ணாமலை, உனக்கு சமைத்து தானே எடுத்துக் கொண்டு மீனா போனார் என்று சொன்னதற்கு, விஜயா திட்டி இருந்தார். பின் மீனா, முதியவர்களுக்கு சாப்பாடு கொடுத்த விசயத்தை சொல்ல, முத்து- அண்ணாமலை இருவருமே பாராட்டி இருந்தார்கள்.

சீரியல் கதை:
பின் எல்லாரும் தூங்கிய பிறகு மனோஜ் தனக்கு வந்த கடிதத்தை தன் அம்மாவிடம் காண்பித்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில், கடிதத்தை நினைத்து இருவருமே பயந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, இதெல்லாம் ஒன்றுமில்லை விளையாட்டிற்காக யாரோ செய்த வேலை என்று சொல்லி சமாதானம் செய்தார் . மறுநாள் மீனா, அந்த முதியவர்களுக்கு சாப்பாடு கொண்டு போய் தருகிறார். அதற்கு முன்பே முத்து அவர்களுக்கு வேலை கொடுத்து சம்பளமும் தந்தார் . இன்னொரு பக்கம் ரோகினி, தன் மகன் அம்மாவிற்காக வீடு தேடிக் கொண்டிருந்தார். கடைசியில் செல்வம், பண கஷ்டத்தில் குடித்துவிட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய அப்பாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று செல்வம் கேட்க, நான் எப்படியாவது ரெடி பண்ணி தருகிறேன் என்று முத்து வாக்கு கொடுக்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ், தனக்கு வந்த கடிதத்தை நினைத்து பயந்து கொண்டு பாதுகாப்பிற்கு ஆட்களை வேலைக்கு எடுக்கிறார். அப்போது பயில்வான் மாதிரி இருக்கும் ஒரு நபர் வேலைக்கு வருகிறார். அவர் எனக்கு சம்பளம், உணவு கொடுத்தால் போதும் என்று சொல்லி சாப்பாடு லிஸ்ட் போட்டார் .

சீரியல் ட்ராக்:
இதை கேட்டு ரோகினி, மனோஜ் இருவருக்குமே மயக்கமே வந்து விடுகிறது. பின் மனோஜ், சண்டை போடுவியா என்று கேட்டதற்கு, அந்த நபர் மனோஜை தூக்கி போடுகிறார். இதை பார்த்து ரோகினி பயப்படுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, தனக்கு கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செல்வத்திடம் கொடுப்பது பற்றி மீனாவிடம் கேட்க, அவர் முடியாது. நமக்கு வீடு கட்ட வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார். இருந்துமே முத்து கேட்காமல் பணத்தை கேட்க, கோபத்தில் மீனா முடியாது என்று மறுத்து விடுகிறார். இதை முத்து தான் வேலை செய்யும் இடத்தில் சொன்னவுடன் அவர்களும், பொண்டாட்டி என்றாலே இப்படித்தான். யாரிடமும் சேர விட மாட்டார்கள் என்று தப்பு தப்பாக சொல்லிக் கொடுக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






