விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, சீதாவை சந்தித்து எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டார். அதற்கு சீதா, கவர்மெண்ட் வேலையில் இருக்க வேண்டும். வீட்டிற்கு ஒரே பயனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதை கேட்டவுடன் முத்து, நீ கேட்டது போலவே நான் மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் ரோகினி, ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது ஸ்ருதி அம்மாவிடம் 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று ரோகினி கேட்டார். உடனே அவர், தன்னுடைய கணவரை தனியாக அழைத்து சென்று பணத்தைப்பற்றி பற்றி சொன்னார். அதற்கு ஸ்ருதி அப்பா, ரோகினியை வைத்து தான் ஸ்ருதியை நம் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்.

நீ அவர் கேட்கும் பணத்தை கொடு என்றார். அதற்குப்பின் ஸ்ருதியின் அம்மாவும் பணத்தை தருகிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் முத்து வீட்டிற்கு வந்த முத்து, சீதா எப்படிப்பட்ட மாப்பிளை வேண்டும் என்று சொன்னதை சொன்னார். உடனே மீனா, அவள் அருணை மனதில் வைத்து தான் இதையெல்லாம் சொல்லி இருக்கிறார் என்றார். இதைக் கேட்ட முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தார். பின் மீனா- முத்து இருவருமே சீதாவை சந்திக்க போனார்கள். அப்போது சீதாவிடம் முத்து, நீ அருணை மனதில் வைத்து தான் மாப்பிள்ளை பார்க்க சொன்னாயா? என்று கேட்டார். அதற்கு சீதாவுமே ஆமாம் என்று உண்மையை ஒத்துக்கொண்டார். இதனால் மீனாவின் அம்மா, சீதாவை வெளுத்து வாங்கி இருந்தார். கோபத்தில் முத்து எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினி, ஸ்ருதி அம்மாவிடம் பணத்தை வாங்கி வந்து விஜயாவிடம் கொடுத்து விட்டார். அப்போ விஜயா, இந்த பணத்தை யாரிடம் வாங்கினாய்? எனக்கு தெரிந்தவர்களிடம் வாங்கினாயா? என்றெல்லாம் கேட்டார். அதற்கு ரோகினி, நான் வித்யாவிடம் தான் வாங்கினேன் என்று பொய் சொன்னார். பின் பணத்தை வாங்கிக் கொண்டு விஜயா வழக்கம் போல் ரோகினியை திட்டி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் கோயிலில் மீனா-சீதா பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, அவர் மனதில் எதையுமே வைத்துக் கொள்ள மாட்டார். அவரிடம் உண்மையை மறைத்து இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். உடனே சீதா, நானே உண்மையை சொல்லி விடுகிறேன் என்றார்.

நேற்று எபிசோட்:
அதற்கு மீனா, நேரம் வரும்போது சொல்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் முத்து, உயிருக்கு போராடி இருந்து காப்பாற்றிய பெண்ணை அவர் காதலித்தவரையே வீட்டில் திருமணம் செய்து வைத்தார்கள். அந்த வீட்டிற்கு முத்து போய் இருந்தார். முத்து காலில் விழுந்து மணமகள்கள் ஆசிர்வாதம் வாங்கினார்கள். அப்போது அவர் கண்ணுக்கு சீதா- அருண் போலவே தெரிகிறது. இதனால் முத்து மனம் தடுமாறி இருந்தார். அந்த சமயம் பார்த்து அருணின் அம்மா முத்துவிடம் பேச வந்தார். முத்துவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இதனால் முத்து செல்வத்திடம் புலம்பி கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலையிடம் மீனா, சீதா- அருண் காதலுக்கு முத்து ஒத்துக் கொள்ள மறுக்கிறார். என்ன செய்வது என்று புரியவில்லை. எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. சீதாவின் நிலைமை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு அண்ணாமலை, நான் முத்துமிடம் பேசுகிறேன். எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட விஜயா, வழக்கம்போல் மீனாவையும், மீனா குடும்பத்தையும் ரொம்ப ஏளனமாக பேசிக் கொண்டிருக்கிறார். உடனே அண்ணாமலை, விஜயாவை திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து, மீனாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது முத்து, நீ கேட்ட மாதிரி அரசாங்க வேலை, வீட்டிற்கு ஒரே பையன் பார்த்துவிட்டேன். வீட்டிற்கு வர சொல்லட்டுமா? என்று கேட்டவுடன் சீதா ரொம்பவே பதறுகிறார். உடனே முத்து, நீ ஆசைப்பட்ட அருணையே திருமணம் செய்து கொள். அருணை பெண்பார்க்க வீட்டிற்கு வர சொல் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். சீதாவிற்கு தலைகால் புரியாமல் குதிக்கிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து, சீதா- அருண் காதலுக்கு சம்மதம் தெரிவித்த விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொல்கிறார். இதை கேட்டவுடன் மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார். இதை கேட்டவுடன் விஜயாவிற்கு வயிறு எரிகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.






