விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருணின் அம்மா, நீங்கள் என் பையனை பற்றி தவறாக புரிந்து இருக்கிறீர்கள். இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்று பேசி இருந்தார். மீனாவின் அம்மா, என் மாப்பிள்ளை முடிவு தான் எங்களுடைய முடிவு. அவர் பேச்சை மீறி நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். அவருக்கு இந்த திருமணத்தில் சம்மந்தமில்லை. தயவு செய்து கிளம்புங்கள் என்று அவரை அனுப்பி விட்டார். பின் அருணின் அம்மா, இந்த திருமணத்தில் அவர்கள் வீட்டில் யாருக்குமே விருப்பம் இல்லை என்றார். இன்னொரு பக்கம் முத்துவை சந்தித்த சீதா, அருணை காதலிக்கும் விஷயம் பற்றி பேசி இருந்தார். உடனே முத்து, நான் உனக்கு நல்ல மாப்பிள்ளையாக பார்க்கிறேன். தயவு செய்து இந்த விஷயமாக என்னிடம் பேசாதே என்று கோபப்பட்டார்.

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் முத்து, எங்கே போயிருந்தாய்?அருணின் அம்மா வீட்டிற்கு வந்தாரா? என்று கேட்டார். அதற்கு மீனா, நீங்கள் கோபப்படுவீர்கள் என்று தான் நான் சொல்லவில்லை. அருண் என்னை தனியாக சந்தித்து பேசினார். அவர் சீதாவை திருமணம் செய்தில் உறுதியாக இருக்கிறார் என்று சொன்னவுடன் முத்து, அதெல்லாம் முடியாது. நான் சீதாவிற்கு வேறு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று இருவருக்கும் இடையே விவாதம் நடக்கிறது. இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை தன் வழிக்கு கொண்டு வருவதற்கு யாரோ ஒருவரிடம் பேசுவது போல் பேசி இருந்தார். அதைக் கேட்ட மனோஜ் சந்தேகப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகிணி பேசியிருப்பதை ஒட்டு கேட்ட மனோஜ், வெளியே வந்து யாரிடம் பேசுகிறாய்? என்று கேட்டார். ரோகினி, என்னுடைய பிரண்டு என்று சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் வீட்டுக்கு ஸ்ருதி அம்மா வந்தார். அவர் 10 லட்ச ரூபாய் செக் உடன் பழம், ஸ்வீட் தட்டு வைத்து கொடுத்தார். அண்ணாமலை எதற்கு என்று கேட்டார். அதற்கு ஸ்ருதி அம்மா, ரவி தொடங்க இருக்கும் புது ஓட்டலுக்கு தான். நாங்கள் கொடுக்கும் சின்ன தொகை என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், ரவிக்கு விருப்பமே இல்லை.

நேற்று எபிசோட்:
ரவி, நான் சொந்தமாக ஆரம்பிக்கிறேன் என்று சொன்னார். ஆனால், சுருதி ஒத்துக் கொள்ளவே இல்லை. விஜயா, பணத்தை வாங்க சொல்லி ரவியை கட்டாயப்படுத்தி இருந்தார். அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் ரவி முடிவு தான், நாங்கள் தலையிட மாட்டோம் என்றார். பின் ஸ்ருதி கட்டாயத்தினால் ரவி மனதே இல்லாமல் அந்த பணத்தை வாங்கி கொண்டார். அதற்குப் பின் தன்னுடைய நண்பர்களிடம் மீனா, சீதாவின் கல்யாணத்தை பற்றி பேசி இருந்தார். இன்னொரு பக்கம் செல்வம்-முத்து, சீதாவின் காதலைப் பற்றி பேசினார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செல்வம், சீதாவின் காதலுக்கு சப்போர்ட்டாக முத்துவிடம் பேசுகிறார். ஆனால், முத்து பிடிவாதமாக இந்த கல்யாணம் நடக்காது என்கிறார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அம்மாவிடம் சீதா கல்யாணத்திற்காக பேசுகிறார். அதற்கு மீனாவின் அம்மா, மாப்பிள்ளை முடிவு தான் என்னுடைய முடிவு. அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. சீதா மனதை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான் என்று சொல்கிறார். பின் முத்து வரும் வழியிலேயே அருணம் பைக்கில் வருகிறார். ஒத்தடி பாதை என்பதால் முத்து, அருணை பின்னாடி போக செல்கிறார். அருண், முத்துவை பின்னாடி போக சொல்கிறார். இதனால் இருவருமே முறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் டிராபிக் அதிகம் ஆகிறது. அந்த இடத்திற்கு வந்த சீதா, அருணை பின்னாடி போக சொல்லி சைகை காண்பிக்கிறார். அருணும் சீதாவிற்காக விட்டுக் கொடுத்து பின்னாடி போகிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் விஜயா, ரோகிணி தனக்காக கொடுத்த செயினை பார்வதியிடம் காண்பித்து சந்தோஷப்படுகிறார். உடனே பார்வதி, நீயும் மருமகளும் சேர்ந்து விட்டீர்களா? என்று கேட்கிறார். அதற்கு விஜயா, அப்படி எல்லாம் இல்லை. அவளை எல்லாம் என் மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று வழக்கம்போல ரோகினி பற்றி கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சிந்தாமணி, விஜயாவை பார்க்க வருகிறாள். அவர், என்னுடைய பிறந்தநாளுக்கு அழைக்க வந்தேன். நீங்கள் வரவேண்டும் என்று பார்வதியையும் விஜயாவையும் அழைக்கிறார். விஜயா சரி என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் அருணை சந்தித்த சீதா, இந்த கல்யாணம் நடக்காது. என்னை மன்னித்து விடுங்கள் என்று பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






