விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, தன் நண்பரை சந்திக்க போவதாக மனோஜ் இடம் சொன்னார். இதனால் அந்த நண்பன் யார் என்று தெரிந்து கொள்ள மனோஜ், ரோகினியை பின்தொடர்ந்தே போனார். ரோகினி ஒரு பேக்கரியில் கேக் வாங்கினார். அதையெல்லாம் பார்த்த மனோஜ், பேக்கரியில் விசாரித்து கொண்டார். இன்னொரு பக்கம் மீனா சொன்ன வார்த்தையால் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் விஜயாவிடம் ஜாலியாக வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார். முத்து தன்னுடைய அம்மாவை புகழ்ந்து பாடி ஆட்டமெல்லாம் போட்டார்.

அப்போது அண்ணாமலை வெளியே வந்தவுடன் ஒரு கோட்டைக் கிழித்து அம்மாவை தாண்ட சொன்னார் முத்து. உடனே அண்ணாமலை தாண்ட வேண்டாம் என்றவுடன் விஜயாவும் அமைதியாகி விட்டார். முத்து, இதற்கு தான் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். கணவன் சொன்ன ஒரு வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறார் என்று மீனாவை குறை சொன்னார். மறுநாள் காலையில் அண்ணாமலை, மீனாவிடம் முத்து குடித்து வந்ததை பற்றி விசாரித்தார். அப்போது மீனா, சீதா காதலிக்கும் விஷயம் பற்றி சொன்னார். உடனே அண்ணாமலை, சீதாவிற்கு பிடித்து இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்று சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அண்ணாமலை, நான் முத்துவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன். நல்ல குடும்பமாக இருந்தால் சீதாவிற்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று மீனாவிற்கு ஆறுதல் சொன்னார். முத்துவிடம் ரொம்ப மோசமாக மனோஜ் நடந்து கொண்டதால் அவரை அடித்து விட்டார். அதனால் அவருக்கு வாய் உடைந்து விட்டது. பின் ஹாஸ்பிடல் கட்டு போட்டுக்கொண்டு வாய் பேச முடியாத அளவிற்கு மனோஜ் இருந்தார். வீட்டில் எல்லோருமே என்னானது என்று கேட்டார்கள். ஆனால், மனோஜ் சொன்னது யாருக்கும் புரியவில்லை. இன்னொரு பக்கம் சீதா வீட்டில் மயங்கி கிடப்பதால் அவருடைய அம்மா ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றார்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் மீனாவிடம் தகவலை சொன்னார்கள். சீதாவின் நிலைமையை அறிந்து ஹாஸ்பிடலுக்கு அருண் வந்தார். பின் அருண், தேவையான மெடிசனை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். இதை பார்த்த முத்து கோவப்பட்டு அருணிடம் சண்டைக்கு போனார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. உடனே சீதாவின் அம்மா, அருணையும் அவருடைய அம்மாவையும் கிளம்ப சொன்னார். முத்துவும் கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்கு பின் டாக்டர், சீதாவின் ஆழ்மனதில் கவலை இருந்தது. அதை கண்டுபிடியுங்கள் இல்லையென்றால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னார். இதனால் மீனா, அவர் அம்மா இருவருமே ஷாக் ஆனார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் டாக்டர் சொன்னதை கேட்டு மீனாவும் அவருடைய அம்மாவும் ரொம்பவே பயப்படுகிறார்கள். அதற்கு மீனா, நீங்கள் எப்படியாவது என் கணவரிடம் பேசுங்கள். சீதா விருப்பப்படியே திருமணம் செய்து வைக்கலாம் என்று தன்னுடைய அம்மாவிற்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், சீதாவின் கல்யாணத்தால் மீனாவின் வாழ்க்கையில் பிரச்சனை வருமா? என்று தான் மீனா அம்மா பயப்படுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ் பேசுவது விஜயாவிற்கு புரியவில்லை. உடனே ரோகினி, ஷோரூம்க்கு என்னையும் அழைத்துச் செல்வதாக சொல்கிறார் என்றவுடன் விஜயாவால் நம்ப முடியவில்லை. பின் கோபத்தில் விஜயா, மனோஜை திட்டி விட்டு ரோகினி மட்டும் கடைக்கு போக சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனா, சீதா ஹாஸ்பிடல் இருக்கும் விஷயத்தை அண்ணாமலை இடம் சொல்கிறார். அவருமே அதிர்ச்சியாகி சீதாவிற்கு பிடித்த மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்கிறார். அதற்குப்பின் முத்து வெளியிலேயே சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுகிறார். இதை பார்த்து மீனா கஷ்டப்பட்டு ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். இதனால் முத்து-மீனா இடையே வாக்குவாதம் அதிகமாகிறது. இதை பார்த்து அண்ணாமலை, சீதாவின் திருமணத்தை பற்றி முத்துவிடம் பேசுகிறார். உடனே முத்து, நான் அங்கிருந்த போலீஸிடம் விசாரித்தேன். அருண் சரி இல்லை. பழிவாங்கும் எண்ணம் நிறைய வைத்திருக்கிறான் என்றெல்லாம் சொல்கிறார். மீனா, அருணுக்கு தான் சப்போர்ட் செய்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






