விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து வீட்டில் கொலு வைக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. ரோகினியும் அவருடைய தோழியும், இந்த விழா முடிவதற்குள் முத்து மொபைலை எடுத்து விட வேண்டும் என்று பிளான் போட்டார்கள். பின் விழாவில் விஜயா பாட்டை கேட்டவுடன் நாய் எல்லாம் குறைத்தது, பக்கத்து வீட்டுக்காரர் பயங்கரமாக திட்டியதால் விஜயா பாடுவதை நிறுத்திவிட்டார். அதற்குப்பின் மீனா பாடியதை கேட்டு எல்லோருமே பாராட்டி கைதட்டி இருந்தார்கள்.

பின் ரோகினி தன்னுடைய மாமியாருக்கு ஐஸ் வைக்க புது புடவை வாங்கி வந்து தர, சந்தோஷத்தில் ரோகினி- மனோஜை புகழ்ந்து விஜயா பேசி இருந்தார். அதற்குப்பின் மீனாவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்ததை பார்த்த விஜயா அவர்களை கிண்டல் நக்கலுமாக பேசி இருந்தார். முத்து வீட்டிற்கு ஸ்ருதிவின் அம்மா வந்தார். வழக்கம் போல் அவர் வந்த உடனே முத்து அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குப்பின் ரோகினியின் தோழி குச்சி ஆட்டத்திற்கு தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கி வந்து எல்லோரையும் நடனமாட வைத்தார்.
சிறகடிக்க ஆசை:
வீட்டில் உள்ள எல்லோருமே நடனம் ஆடினார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று முத்து போனை எடுத்த ரோகினி அந்த வீடியோவை பார்த்து தன் மொபைலுக்கு மாற்ற பார்த்தார். அந்த சமயம் பார்த்து முத்து-மீனா அவர் மீது விழ போன் கீழே தவறி விழுந்து விட்டது. இதனால் முத்து கோபப்பட்டு கத்தி போனை வாங்கி வந்து விட்டார். கடைசி வரை அந்த வீடியோவை எடுக்க முடியவில்லை என்று ரோகினி வருத்தப்பட்டார். பின் கிரிஷ் வீட்டிற்கு சென்ற முத்து-மீனா அவர் பாட்டியை விசேஷத்திற்கு அழைத்தார்கள்.

கடந்த வாரம் எபிசோட்:
மேலும், கிருஷ்ணர் வேடம் போட்டு கிரிஷை வீட்டிற்கு முத்து-மீனா அழைத்து வந்தார்கள். இதை பார்த்து எல்லோருமே சந்தோஷப்பட, விஜயா மட்டும் கோபப்பட்டார். பின் மீனா, கிருஷ்ணர் பாட்டை பாட, கிர்ஷை முத்து கொஞ்சி இருந்தார். இதையெல்லாம் பார்த்து ரோஹினிக்கு கோபம் வந்தது. உடனே ரோகினி அம்மா, நீங்கள் எதற்கு என் பேரனுக்கு தேவையில்லாமல் நம்பிக்கை கொடுக்கிறீர்கள். ஏன் அவன் மனதை கெடுக்கிறீர்கள்? அவனுக்கு பாட்டி, அம்மா எல்லோருமே இருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இன்னொரு முறை தத்தெடுப்பதை பற்றி பேசாதீர்கள். எங்கள் வீட்டிற்கும் வராதீர்கள் என்று கோபமாக பேசினார். முத்து-மீனா அவரை சமாதானம் செய்தும், ரோகினி அம்மா எதையும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இதை பார்த்து விஜயா-ரோகினி சந்தோஷப்பட்டார்கள். முத்து-மீனா ரொம்ப வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனாவை திட்டியதை நினைத்து ரோகினி அம்மா ரொம்ப வருத்தப்பட்டு அழுகிறார். அவரை ரோகினி தோழி சமாதானம் செய்தும் புலம்பி அழுது கொண்டே இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, நீ பேசுனது சரி என்று அவரை பாராட்டினார். உடனே கோபப்பட்டு
அவர் அம்மா, ஏன் இந்த பாவத்தை செய்ய வைத்தாய்? அவர்கள் நல்லவர்கள் என்று சொன்னார். வழக்கம்போல ரோகினி, அவர் அம்மாவை திட்டுகிறார். இன்னொரு பக்கம் முத்து மீனா இருவருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட, இதை பார்த்து விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார். மறுநாள் மீனாவின் மனதை மாற்ற முத்து அவருடைய அம்மா வீட்டிற்கு அழைத்து போனார். அந்த சமயம் பார்த்து கல்லூரியில் தேர்வு எழுத முடியாததால் சத்யா வீட்டுக்கு வந்திருந்தார். இதை அறிந்த முத்து, நான் எப்படியாவது எழுத வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார்.






