விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ், ஸ்கூலில் பீஸ் கட்ட சொல்லி லெட்டர் கொடுத்திருந்தார். அதை பார்த்து முத்து, நான் கட்டுகிறேன் என்றார். கிரிஷ் கேட்டுக் கொண்டதால் ரோகிணி, மனோஜை கட்ட சொல்கிறார். உடனே விஜயா திட்டினார். பின் ஒரு வழியாக முத்து பணத்தை கட்ட ஒத்துக் கொண்டார். அதற்கு பின் அண்ணாமலை, தன் அம்மாவை இழந்த சோகம் கிரிஷ் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. கிரிஸ் பாட்டி, எதற்காக கிரிஷை இங்கு விடணும். ஏதோ மர்மம் இருக்கிறது. அதை கண்டுபிடிக்கணும் என்றார்.

முத்து. அண்ணாமலை இருவரும் கிரிஷ் மீது சந்தேகப்படுறார்கள். இதை அறிந்த மீனா, ரோகினியை மாடிக்கு அழைத்து பேசி இருந்தார். அப்போது மீனா, இனிமேல் உண்மையை மறக்க முடியாது. மாமாவிற்கும் என் கணவருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்குள் நீ உண்மையை சொல்ல வேண்டும். இல்லை என்றால் நானே வீட்டில் சொல்லி விடுவேன். என்னால் இனிமேல் நடிக்க முடியாது என்றார். ரோகினி எவ்வளவோ கெஞ்சி கேட்டுமே மீனா ஒற்றுக்கொள்ளவில்லை. 7 நாள் கெடு என்று சொல்லிவிட்டு மீனா சென்றார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் மீனா, நான் கிரிஷ் பாட்டியிடம் பேசி இருக்கிறேன். ஏழு நாட்களுக்குள் வந்து எல்லா விஷயத்தையும் சொல்வதாக சொன்னார். அதற்கு பின் மீனா அம்மாவிற்கு பிறந்தநாள் என்பது வீட்டில் அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். சீதா அருண் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். பின் எல்லோருமே சேர்ந்து மீனா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த சமயம் மீனாவிற்கு போன் செய்த மகேஸ்வரி, வீட்டில் ரோகிணி பற்றி உண்மை சொல்லாதீர்கள். வேறு ஏதாவது செய்யலாம் என்று ஏதேதோ பேசி கெஞ்சினார். ஆனால், மீனா தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை உறுதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, கிரிஷ் பெரியம்மா- பெரியப்பாவை ரோட்டில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்கள் போட்டோ ஷாப் போகணும் என்று சொல்வதால் முத்து அவர்களை அழைத்துக் கொண்டு போகிறார். அங்கு கிரிஷின் பெரியப்பா, ரோகினி போட்டோவை பிரேம் செய்வதற்கு கடையில் கொடுக்கிறார். அந்த போட்டோவை பார்த்து முத்து ஷாக் ஆகி விசாரிக்கிறார். அப்போது கிரிஷ் பெரியப்பா, இவங்க என்னுடைய தம்பி வைப் கல்யாணி. இப்போ இரண்டாவது கல்யாணம் ஆகி சென்னையில்தான் இருக்கிறார்கள். கிரிஷ் அம்மா இவங்க தான் என்று சொல்வதால் முத்துவிற்கு தலை சுற்றுகிறது.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ரோகினி, வீட்டில் உண்மையை சொல்ல வேண்டாம். நான் முதலில் மனோஜிடம் பேசுகிறேன். அதற்கு பிறகு வீட்டில் சொல்லலாம் என்று கெஞ்சுகிறார். மீனா வேறு வழியில்லாமல் ரோகிணி செல்வதற்கு ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் கோபத்தில் வீட்டிற்கு வரும் போது முத்து, ரோகினி சொன்ன விஷயங்களை எல்லாம் நினைத்து பார்க்கிறார். பின் முத்து, வீட்டில் எல்லோரையும் வரவைக்கிறார் ரோகினி பார்த்தவுடன் முத்து, என்ன கல்யாணி என்று சொல்கிறார். இதை கேட்டு ரோகிணி பதறிப் போகிறார்.






