விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, வித்யாவை சந்திக்கப் போனார். அப்போது வித்யா, யாரை கேட்டு நீ முருகனிடம் பணம் கேட்டாய்? அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று கோபமாக பேசி இருந்தார். அதற்கு ரோகினி, எனக்கு ப்ரச்சனை. வேறு வழியில்லாமல் தான் அவரிடம் கேட்டேன் என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு வித்யா, நீ உன் குடும்பத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். அதனால் பிரச்சனையில் மாட்டியிருக்கிறாய். நீ உண்மையாக இருந்தாலே உனக்கு எந்த பிரச்சனையுமே வராது. இந்த உலகத்தில் எல்லாருக்கும் தான் பிரச்சனை இருக்கிறது. அவர் அவர்கள் பிரச்சனையை அவர்கள் தான் பார்க்கிறார்கள் என்று ரொம்ப மோசமாக திட்ட, ரோகினி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அதற்குப்பின் வீட்டுக்கு வந்த ரோகினி, வித்யா பணம் தரவில்லை. எனக்கும் அவளுக்கும் சண்டை வந்துவிட்டது. நீ பணம் கொடுத்து உதவி செய் என்று கேட்டார். உடனே மனோஜ், அம்மாவுக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்று வழக்கம்போல ஜகா வாங்கி கொண்டார். கடைசியில் ரோகினி, ஸ்ருதியிடம் பண உதவி கேட்டார். அப்போது ஸ்ருதி, நான் ரெஸ்டாரண்டில் பணத்தை போட்டு விட்டேன் என்றார். உடனே ரோகினி, மீனா கேட்டிருந்தால் செய்திருப்பீர்கள் என்றார். அதற்கு சுருதி, மீனா பொய் சொல்லி ஏமாற்ற மாட்டார். அத்தையை காக்கா பிடிக்க மீனா எதுவும் வாங்கித் தர மாட்டார். மீனா உங்களைப் போல் கிடையாது என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு ரோகினி அங்கிருந்து கிளம்பி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
முத்து, சீதாவை சந்தித்து எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டார். அதற்கு சீதா, கவர்மெண்ட் வேலையில் இருக்க வேண்டும். வீட்டிற்கு ஒரே பயனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதை கேட்டவுடன் முத்து, நீ கேட்டது போலவே நான் மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் ரோகினி, ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது ஸ்ருதி அம்மாவிடம் 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று ரோகினி கேட்டார். உடனே அவர், தன்னுடைய கணவரை தனியாக அழைத்து சென்று பணத்தைப்பற்றி பற்றி சொன்னார். அதற்கு ஸ்ருதி அப்பா, ரோகினியை வைத்து தான் ஸ்ருதியை நம் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்.

கடந்த வாரம் எபிசோட்:
நீ அவர் கேட்கும் பணத்தை கொடு என்றார். அதற்குப்பின் ஸ்ருதியின் அம்மாவும் பணத்தை தருகிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் முத்து வீட்டிற்கு வந்த முத்து, சீதா எப்படிப்பட்ட மாப்பிளை வேண்டும் என்று சொன்னதை சொன்னார். உடனே மீனா, அவள் அருணை மனதில் வைத்து தான் இதையெல்லாம் சொல்லி இருக்கிறார் என்றார். இதைக் கேட்ட முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தார். பின் மீனா- முத்து இருவருமே சீதாவை சந்திக்க போனார்கள். அப்போது சீதாவிடம் முத்து, நீ அருணை மனதில் வைத்து தான் மாப்பிள்ளை பார்க்க சொன்னாயா? என்று கேட்டார். அதற்கு சீதாவுமே ஆமாம் என்று உண்மையை ஒத்துக்கொண்டார். இதனால் மீனாவின் அம்மா, சீதாவை வெளுத்து வாங்கி இருந்தார். கோபத்தில் முத்து எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் ரோகினி, ஸ்ருதி அம்மாவிடம் பணத்தை வாங்கி வந்து விஜயாவிடம் கொடுத்து விடுகிறார். அப்போ விஜயா, இந்த பணத்தை யாரிடம் வாங்கினாய்? எனக்கு தெரிந்தவர்களிடம் வாங்கினாயா? என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு ரோகினி, நான் வித்யாவிடம் தான் வாங்கினேன் என்று பொய் சொல்கிறார். பின் பணத்தை வாங்கிக் கொண்டு விஜயா வழக்கம் போல் ரோகினியை திட்டி அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் கோயிலில் மீனா-சீதா பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, அவர் மனதில் எதையுமே வைத்துக் கொள்ள மாட்டார். அவரிடம் உண்மையை மறைத்து இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று புலம்புகிறார். உடனே சீதா, நானே உண்மையை சொல்லி விடுகிறேன் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு மீனா, நேரம் வரும்போது சொல்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் முத்து, உயிருக்கு போராடி இருந்து காப்பாற்றிய பெண்ணை அவர் காதலித்தவரையே வீட்டில் திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த வீட்டிற்கு முத்து போய் இருக்கிறார். முத்து காலில் விழுந்து மணமகள்கள் ஆசிர்வாதம் வாங்கினார்கள். அப்போது அவர் கண்ணுக்கு சீதா- அருண் போலவே தெரிகிறது. இதனால் முத்து மனம் தடுமாறுகிறார். அந்த சமயம் பார்த்து அருணின் அம்மா முத்துவிடம் பேச வருகிறார். முத்துவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இதனால் முத்து செல்வத்திடம் புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






