விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, தன் மனைவியை காதலித்த முருகனை ரோடில் சந்தித்து பேசி இருந்தார். அப்போது அவர், நான் என்னுடைய லவ்வை சொல்ல போகிறேன். ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் முத்து, இந்த முறை சரியான பெண்ணை தேர்ந்தெடுத்தாயா? என்று கிண்டலாக பேசி இருந்தார். அதற்கு பின் இருவருமே கோயிலுக்கு வந்தார்கள். கோயிலில் சீதா-அருண் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அருண், எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்? வீட்டில் பேச வரட்டுமா என்று கேட்டார். அதற்கு சீதா, நாம் இருவரும் பழகி தெரிந்து கொள்ளலாம். அதற்கு பிறகு வீட்டில் பேசலாம். யாராவது பார்ப்பதற்குள் கிளம்பி விடுங்கள் என்றார்.

அந்த சமயம் பார்த்து மீனா கோயிலுக்கு வந்தார். அப்போது அவர், வீட்டில் ரோகினி செய்த வேலையை பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொன்னவுடன் அவர் ஷாக் ஆனார். அதற்குப்பின் கோயிலுக்குள் சீதா இருக்கும் விஷயத்தை அறிந்து உள்ளே மீனா வந்தார். அதற்குள்ளேயே அருண் சென்று விட்டார். சீதாவும் ஏதேதோ சொல்லி மீனாவை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார். பின் முத்து- முருகன் இருவருமே கோயிலுக்கு வந்தார்கள். கோயிலில் அருணை பார்த்தவுடன் முருகன் அவரிடம் பேசி இருந்தார். அதற்கு பின் முத்து, இந்த ஆளை தெரியுமா? என்று கேட்டார். அதற்கு முருகன், நன்றாக தெரியும். ரொம்ப நல்லவர். அவருடைய காதல் சக்சஸ் ஆகிவிட்டது என்று சொன்னார். உடனே முத்து, அவனை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப பாவப்பட்டவள் என்று நக்கலாக பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ஷோரூமில் மனோஜ் ரோகினியை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொருவருமே மனோஜுக்காக ரோகினி செய்த வேலையை பற்றி சொல்லி கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் முத்து, சவாரிக்கு இரண்டு பேரை அழைத்து வந்தார். அவர்கள் காரிலேயே குடிப்பதால் முத்துவிற்கு கோபம் வந்து அவர்களை அடித்தார். உடனே அவர்கள், நாங்கள் சிட்டி ஆட்கள் என்று சொன்னார்கள். உடனே முத்து, அவர்களை சிட்டி இடத்திற்கு அழைத்து வந்து வெளுத்து வாங்கி இருந்தார். அந்த இடத்தில் மீனாவின் தம்பி சத்யாவும் இருந்தார்.

நேற்று எபிசோட்:
சத்யா, நான் காலேஜுக்கு போகும்போது என்னை வழி மறைத்து அழைத்து வந்து விட்டார்கள் என்று சொன்னார். அப்போது சிட்டி, நீ எப்படி தேர்வு எழுதி விடுகிறாய்? என்று பார்க்கிறேன் என்று சொன்னவுடன் முத்து, என்னை மீறி நீ அவன் மீது கையை வைத்து பார் என்று சவால் விட்டார். இன்னொரு பக்கம் வித்யாவிற்கு முருகன் தன்னுடைய காதலை சொல்ல, வித்யாவும் காதலை ஏற்றுக் கொண்டார். அதற்குப்பின் ரோகினி, கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த சுருதி, பொய் சொன்னீர்கள் என்றவுடன் உங்களை சமைக்க சொல்லி விட்டார்களா? என்று நக்கலாக வெறுப்பேற்றும் வகையில் பேசிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி, முத்து- மீனா கண்ணுக்கு மட்டும் மலேசியா மாமா படவில்லை என்றால் நீங்கள் மாட்டி இருக்க மாட்டீங்க. உங்களுடைய எல்லா விஷயத்திலும் உண்மையை முத்து தான் கண்டுபிடிக்கிறார்கள் என்று சொல்ல சொல்ல, ரோகினிக்கு கோபம் தலைக்கு மேல் ஏறுகிறது. ஆனால், அவர் அமைதியாகவே இருக்கிறார். ஸ்ருதி விடாமல் ரோகினியை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். இதை கேட்டு மீனாவும் சிரித்துக் கொண்டிருக்கிறார். பின் ரோகினி எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதை பார்த்த ஸ்ருதி, முத்து சொன்னது போல் இவர்களிடம் இன்னும் ஏதோ ரகசியம் இருக்கிறது என்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மனோஜ் மாடியில் தூங்கப் போகிறார். உடனே விஜயா, அந்த மேடம் கீழே படுக்கட்டும். நீ பெட்டில் படு என்று சொல்கிறார். இதை கேட்டு ரோகினி ரொம்ப வேதனைப்படுகிறார். மனோஜ் எதுவும் சொல்லாமல் அமைதியாக தூங்குகிறார். இதைப் பார்த்து முத்து- மீனா இருவரும் ரோகினி நிலைமையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சுருதி- ரவி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சுருதி, எனக்கு தெரிந்தவருக்கு மேக்கப் போட வேண்டும். ரோகிணிக்கு அந்த ஆர்டர் கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் ரவி, அம்மா ஏதாவது திட்ட போகிறார்கள் என்று சொல்கிறார். ஸ்ருதி, எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. அது அவர்களுடைய தொழில் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






