விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் பணத்தை எடுத்தவுடன் முத்துவும் அவருடைய குரூப்பும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். ஸ்ருதி மட்டும் வீட்டிற்குள் இருந்தார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி வீட்டுக்குள் வந்தார். சுருதி ஏதேதோ சொல்லி சிந்தாமணியிடம் தப்பித்து வந்துவிட்டார். பின் மீனாவிற்கு ஃபோன் பண்ண முத்து, பணம் எடுத்த விஷயத்தை சொன்னவுடன் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்குள் வந்த சிந்தாமணி இடம், வருமானத்துறை அதிகாரிகள் வந்தார்கள். மஞ்சப்பை பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்று சொன்னவுடன் சிந்தாமணிக்கு சந்தேகம் அதிகமானது.

அந்த சமயம் போன் செய்த மீனா, வருமானவரித்துறை அதிகாரிகள் போல் என்னுடைய ஆட்கள் தான் வந்தார்கள். அடுத்தவர்களை ஏமாத்தி பிழைக்க நினைக்காதே. வாழு வாழ விடு என்றெல்லாம் பயங்கரமாக பேசி இருந்தார். சிந்தாமணியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் வீட்டிற்கு வந்த முத்து, அண்ணாமலை இடம் மீனா பணம் கிடைத்த விஷயத்தை சொன்னார். இதை கேட்டு விஜயா ஷாக் ஆகி கோபப்பட்டார். பின் முத்து, அம்மாவின் நண்பர் சிந்தாமணி தான் இந்த வேலையை செய்தார் என்று சொன்னவுடன் விஜயா உள்ளுக்குள் பயப்பட்டார். உடனே ஸ்ருதி-ரவி இருவருமே இந்த பணத்தை நாங்கள் சிந்தாமணி வீட்டில் தான் எடுத்தோம் என்று சொன்னவுடன் விஜயாவால் எதுவும் பேச முடியவில்லை.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் விஜயா, இது சிந்தாமணி தான் செய்தார் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டார். உடனே ரவி, அவர்கள் வீட்டில் தான் பணத்தை எடுத்தோம் என்று சொன்னவுடன் விஜயாவால் எதுவும் பேச முடியவில்லை. கடைசியில் அண்ணாமலை, நீ சிந்தாமணி உடன் இருக்கும் நட்பை விட்டுவிடு என்று அறிவுரை சொன்னார். ஆனால் விஜயா, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் மீனா, பணத்தை எடுத்துக்கொண்டு சீதாவை பார்க்கப் போனார். அங்கு சீதாவிடம் பணத்தை கொடுத்துவிட்டு நடந்ததை சொன்னவுடன் அவர் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் சீதா, கோவிலுக்கு வந்த அருணிடம் பணத்தை கொடுத்து நடந்ததை சொன்னார்.

நேற்று எபிசோட்:
அதற்கு பின் ஸ்ருதி- ரவி வேலை செய்யும் ஹோட்டலில் நீத்து, youtube ரிவியூவர் வருகிறார். நம்முடைய ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ரிவ்யூ கொடுத்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று சொன்னவுடன் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்தார்கள். அப்போது வந்த மீனா, நன்றி சொல்லும் விதமாக சுருதி, ரவிக்கு வாழைப்பூ வடை, பூசணியில் ஸ்வீட் செய்து தந்தார். அதற்குப்பின் வந்த ரிவியூவருக்கு மீனா செய்த சாப்பாட்டை சுருதி கொடுத்தார். அதை வர் சாப்பிட்டு ரொம்பவே பாராட்டி ஹோட்டலை பற்றி ரிவியூ சொல்லியிருந்தார். சந்தோஷத்தில் நீத்து அவர்களுக்கு பணத்தை பரிசாக கொடுத்தார். பின் இதை வீட்டில் சுருதி, ரவி இருவரும் சொல்லி மீனாவிற்கு பணத்தை கொடுத்து சந்தோஷப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்வதியை சந்தித்த ரோகினியை, எப்படியாவது மனோஜ்-என்னையும் சேர்த்து வையுங்கள் என்று பேசுகிறார். அந்த சமயம் பார்த்து விஜயா வீட்டிற்கு வருவதால் ரோகினி ஒளிந்து கொள்கிறார். அப்போது விஜயா, நீ கேரளா மந்திரவாதியை வரவை. வசியம் வைத்து ரோகினி-மனோஜ் இருவரையும் பிரிக்கணும். நான் நல்ல பணக்காரப் பெண்ணா பார்த்து என் மகனுக்கு கல்யாணம் செய்யணும் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் ரோகினிக்கு பயங்கர கோபம் வருகிறது. உடனே பார்வதி, விசாரித்து சொல்கிறேன் என்று ஏதோ பேசி விஜயாவை அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் ரோகினி, அந்த கேரளா பூசாரியின் நம்பரை எனக்கு கொடுங்கள்.

சீரியல் ட்ராக்:
அவர் மந்திரம் பலிக்காத மாதிரி நான் செய்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் வித்யாவை காதலிக்கும் முருகன், புதிதாக வீடு வாங்குவதற்கு அவரை அழைக்கிறார். அப்போது வித்யா, நான் என்னுடைய காதலுக்கு உதவியவரை அழைத்து வருகிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் மீனா, பணத்தை ஏமாற்றிய கதிரை பார்த்து பாலோ செய்கிறார். ஆனால், அவர் எப்படியோ தப்பித்து விடுகிறார். அதற்குப்பின் மீனா, வித்யாவை சந்தித்து பேசுகிறார். அப்போது வித்யா, மீனாவை வெளியே கூப்பிடுகிறார். அதற்கு அவர், நானும் வருகிறேன். இருந்தாலும் உங்கள் தோழி ரோகினியை வரவையுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு செல்கிறார். அதற்கு பின் வீட்டுக்கு வந்து ரோகினி, வீட்டுக்கு மீனா வந்ததை பற்றி கேட்டு கோப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






