விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து வீட்டில் கொலு வைக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. மீனா எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து இருந்தார். விழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோருமே வந்தார்கள். ரோகினியும் அவருடைய தோழியும், எப்படியாவது இந்த விழா முடிவதற்குள் முத்து மொபைலை எடுத்து விட வேண்டும் என்று பிளான் போட்டார்கள். பின் விழாவில் விஜயா பாடி இருந்தார். விஜயா பாட்டை கேட்டவுடன் நாய் எல்லாம் குறைத்தது. விஜயா பாட்டை யாராலும் காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால், அண்ணாமலை மட்டும் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று பாட சொல்லிக் கொண்டே இருந்தார்.

கடைசியில் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், பயங்கரமாக திட்டி விட்டதால் விஜயா பாடுவதை நிறுத்திவிட்டார். அதற்குப்பின் மீனா பாடியதை கேட்டு எல்லோருமே பாராட்டி கைதட்டி இருந்தார்கள். இதற்கிடையில் முத்து போன் எடுக்க ரோகினி பார்த்தார். ஆனால், முடியவில்லை. நேற்று எபிசோட்டில், இரண்டாவது நாளுக்கான கொலு விழா நடைபெற்றது. அப்போது ரோகினி தன்னுடைய மாமியாருக்கு ஐஸ் வைக்க புது புடவை வாங்கி வந்து தர, சந்தோஷத்தில் ரோகினி- மனோஜை புகழ்ந்து விஜயா பேசி இருந்தார். அதற்குப்பின் மீனாவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தார்கள். இதை பார்த்த விஜயா அவர்களை கிண்டல் நக்கலுமாக பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதற்கு பின் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதாக சொல்லி ரோகினி ஒரு விளம்பர அட்டையை விஜயாவிடம் கொடுத்து திறக்க சொன்னார். இதனால் விஜயா ரொம்ப குஷியாகி விடுகிறார். அதற்குப்பின் வயதான தாத்தா, பாட்டிக்கு சாப்பாடு, துணி எல்லாம் கொண்டு போய் முத்து-மீனா கொடுதார்கள். அப்போது முத்து இவர்களை வீட்டிற்கு கூப்பிடலாம் என்று சொல்லும்போது மீனா, அத்தை தேவையில்லாமல் அசிங்கப்படுத்துவார்கள். அவர்கள் வேணாம் என்று சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஆனது.

நேற்று எபிசோட்:
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் முத்துவுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி இருந்தார்கள். பின் ரோகினி எப்படியாவது முத்து போனை எடுக்க வேண்டும் என்று தன் தோழியிடம் சொல்லி திட்டம் போடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், முத்து வீட்டிற்கு ஸ்ருதிவின் அம்மா வருகிறார். வழக்கம் போல் அவர் வந்த உடனே முத்து அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குப்பின் ரோகினியின் தோழி குச்சி ஆட்டத்திற்கு தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கி வந்து எல்லோரையும் நடனமாட சொல்கிறார்.

இன்றைய எபிசோட்:
வீட்டில் உள்ள எல்லோருமே நடனம் ஆடுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று முத்து போனை எடுக்க ரோகினி, அவருடைய தோழியும் திட்டம் போடுகிறார்கள். அதற்கு ஏற்ப முத்து போன் அவர்களுக்கு கிடைத்தது. உடனே இருவருமே அந்த வீடியோவை பார்த்து தங்களின் மொபைலுக்கு மாற்ற பார்க்கிறார்கள். அந்த சமயம் பார்த்து முத்து-மீனா அவர்கள் மீது விழ போன் கீழே தவறி விழுந்து விடுகிறது. இதனால் முத்து கோபப்பட்டு கத்தி போனை வாங்கி வந்து விடுகிறார். கடைசி வரை அந்த வீடியோவை எடுக்க முடியவில்லை என்று ரோகினி வருத்தப்படுகிறார். பின் கிரிஷ் வீட்டிற்கு சென்ற முத்து-மீனா அவர் பாட்டியை விசேஷத்திற்கு அழைத்தார்கள்.
https://www.youtube.com/watch?v=M3AQ9E0dAcc
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கொலு விழாவிற்கு கிரிஷ், அவருடைய பாட்டியையும் முத்து-மீனா அழைத்து வருகிறார்கள். கிருஷ்க்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு முத்து- மீனா அழகு பார்த்து தங்களுடைய பிள்ளையாகவே பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த ரோகினிக்கு கோபம் வருகிறது. உடனே ரோகினி அம்மா, நீங்கள் எதற்கு அந்த பையன் மனதில் தேவையில்லாமல் ஆசை வளர்கிறீர்கள்? நானும் பேச வேண்டாம் என்று இருந்தேன். அவனுக்கு பாட்டி, அம்மா எல்லோரும் இருக்கிறார்கள். இனிமேல் தத்தெடுப்பதை பற்றி பேசாதீர்கள். என் வீட்டிற்கும் வராதீர்கள் என்று கோபமாக திட்டி விட்டு செல்கிறார். இதனால் முத்து-மீனா முகம் மாறியது.






