விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் மீனா, கொலு வைக்கும் விஷயத்தை வீட்டில் சொல்ல விஜயா ஒத்து கொண்டார். பின் வகுப்பில் காதல் ஜோடி தேவையில்லாத வேலைகளை செய்ததை பார்த்து மீனா திட்டினார். ஆனால், விஜயா காதல் ஜோடி சொன்னதை நம்பி மீனாவை திட்டி அனுப்பி விட்டார். இதை மீனா முத்துவிடம் சொல்ல, மீண்டும் விஜயா கோபப்பட்டு பேசி இருந்தார். உடனே அண்ணாமலை அறிவுரை சொல்ல, இனிமேல் மீனா சாப்பாடு கொண்டு வர தேவை இல்லை என்று விஜயா சொல்லி விட்டார்.

அதை அடுத்து வகுப்பில் விஜயாவுக்கு, அந்த காதல் ஜோடி மீது சந்தேகம் வந்து அவர்களை தனியாக பிரித்து வைத்தார். இன்னொரு பக்கம் மனோஜ், தனக்கு கடிதம் எழுதிய நபரை தேடி கோயிலுக்கு சென்றார். அங்கு மேனேஜர், சாமியார் கெட்டப்பில் மனோஜிடம் பேச, இதையெல்லாம் பார்த்து ரோகினி பயத்தில் இருந்தார். அப்போது அந்த சாமியார், ஒரு கடிதத்தை கொடுத்து இது முத்து தான் கொடுத்தார் என்றவுடன் மனோஜுக்கு பயங்கர கோபம் வந்து வீட்டில் கத்தினார். இதுவரை லெட்டர் மூலமாக நடந்த விஷயத்தை பற்றி மனோஜ்-விஜயா சொல்ல, எல்லோரும் ஷாக் ஆனார்கள்.
சிறகடிக்க ஆசை:
மேலும், விஜயா - மனோஜ் இருவரும் முத்து மீது தான் பழி போட்டார்கள். ஆனால், மீனா- அண்ணாமலை அதை நம்பவில்லை. பிறகு மனோஜ் சொன்ன விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு மனோஜை அடிக்க போனார். உடனே மனோஜ், தன் அடியாளை கூப்பிட்டு முத்துவை அடிக்க வைத்தார். ஆனால், முத்து அந்த ஆளை அடித்து தூக்கி வெளியே போட்டு விட்டார். இதையெல்லாம் பார்த்து மொத்த வீடுமே சிரித்தது. பின் முத்து, நான் எதற்கு உனக்கு கடிதம் கொடுக்கணும்? என்று சொன்னதற்கு, ரோகினி நடந்ததை சொன்னார்.

கடந்த வாரம் எபிசோட்:
அப்போது மீனா, உங்களை மாட்டி விட்ட அந்த சாமியார் தான் இந்த வேலையை செய்திருக்கணும் என்று சொன்னவுடன் ரோகிணி பயந்தார். அந்த சாமியார் யார் என்று தெரிந்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும். இந்த பிரச்சனைக்கு நானே முடிவு கட்டுகிறேன் என்று முத்து சொல்ல, ரோகிணி என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக பயத்தில் இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், ரோகினி தன் வீட்டில் நடந்ததைப் பற்றி அவருடைய தோழி இடம் சொல்லி, எப்படியாவது நீ முத்து மொபைலில் இருக்கும் சத்யா வீடியோவை எடுக்க வேண்டும் என்று ஆர்டர் போடுகிறார்.

இன்றைய எபிசோட்:
மறுநாள் முத்துவின் வாடகையில் ரோகிணியின் தோழி சவாரி போகிறார். அப்போது அவர், முத்துவின் போனை வாங்கி சத்யா வீடியோவை பார்க்கிறார். ஆனால், அந்த நேரம் பார்த்து மீனா கால் செய்ததால் முத்து ஃபோனை வாங்கி விடுகிறார். இதற்கிடையில் முத்து கோயிலுக்கு சென்று அந்த பிராடு சாமியாரை விசாரிக்கிறார். அப்போது கோயில் உள்ளவர்கள், அவர் பிராடு சாமியார் என்று தெரிந்ததும் அவரை அடித்து நாங்கள் வெளியே துரத்தி விட்டோம் என்று ஓரு வீடியோவை காண்பிக்க, முத்துவுக்கு அந்த நபர் யார் என்று தெரிந்தது.

சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு வந்த முத்து, மனோஜிடம் உனக்கு மொட்டை கடுதாசி கொடுத்த நபர் யார் என்று எனக்கு தெரிந்து விட்டது. அவன் எனக்கு தெரிந்தவன் தான். உன்னுடைய கல்யாணத்தின்போது வாடைக்கு என்னுடைய காரில் தான் வந்தான். அவன் பெண்களைப் பற்றி ரொம்ப தவறாக பேசியதால் அடித்து துரத்தி விட்டேன். ரெண்டு மாதங்களுக்கு முன்பு கூட ஒரு பாட்டி மீது வண்டி ஏத்தி விட்டு தப்பிக்க பார்த்தான். அப்போது நான் தான் அவனை போலீசில் பிடித்துக் கொடுத்தேன் என்று சொன்னார். இதை கேட்ட ரோகினி, சிட்டி நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறான் என்று உள்ளுக்குள் பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






