விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் விஜயா, அந்த துரோகி இருக்கும் இடத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொன்னார். உடனே பாட்டி, போனை வாங்கி விஜயாவிடம் பேசி இருந்தார். பின் வீட்டிற்கு விஜயா வரும் நேரம் பார்த்து ரோகினியும் வந்திருந்தார். அவரை பார்த்த உடனே பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் பாட்டி, ரோகினி எதற்காக பொய் சொன்னாள்? இந்த காரணத்தை கேட்க வேண்டும் என்றவுடன் விஜயா, அதெல்லாம் முடியாது. அவளிடம் பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார்.

பின் விஜயா, ரோகினியை அடிக்கச் சொல்லி சொன்னார். ஆனால், மனோஜ் அமைதியாக இருந்தார். இதனால் ஆத்திரத்தில் விஜயா ரோகினியை அடித்தார். உடனே மனோஜ், அடிக்காதீர்கள். இந்த உண்மை எனக்கு ஏற்கனவே தெரியும் என்று பொய் சொன்னார். இதனால் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. பின் எல்லோரும் மனோஜ் பக்கம் திரும்பி விட்டார்கள். முத்து, நீ உனக்கு தெரியவே தெரியாது என்று சொன்னாயே, இப்ப எதுக்கு மாத்தி சொல்கிறாய் என்று கேட்டதற்கு, ஏதோ காரணங்களை மனோஜ் சொன்னார். ஆனால், விஜயாவால் எதுவுமே நம்ப முடியவில்லை.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மனோஜ், என்னிடம் ஏற்கனவே ரோகினி சொல்லிவிட்டாள். நான் அம்மா திட்டுவார்கள் என்று தான் சொல்லவில்லை என்றார். உடனே விஜயா, மனோஜை அடித்தார். இருந்தாலுமே மனோஜ், ரோகினிக்கு சப்போர்ட் செய்தார். ஆனால், ரோகினி அமைதியாக இருந்தார். அதற்குப்பின் பாட்டி, எதற்காக பொய் சொன்னாய்? என்று கேட்டார். அதற்கு ரோகினி, எனக்கு மனோஜ் ரொம்ப பிடிக்கும்.
நாங்கள் மலேசியாவில் தான் இருந்தோம். எனக்கு சின்ன வயதிலேயே என்னுடைய அப்பா ரொம்ப குடிப்பார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் என்னுடைய அம்மாவை அடித்து துரத்தி விட்டார்.

நேற்று எபிசோட்:
சின்ன வயதிலேயே என் அம்மா வேதனையிலேயே இறந்து விட்டார். அதற்கு பிறகு கஷ்டப்பட்டு படித்து நான் ஒரு பார்லர் தொடங்கினேன். மனோஜை பார்த்தவுடன் பிடித்தது. அப்போது தான் அத்தை பணக்கார பெண்ணை தேடுகிற விஷயம் தெரிந்துதான் நான் இப்படி பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னவுடன் விஜயா, இன்னும் என்னென்ன பொய் சொல்கிறாய் என்று அதிகமாக கோபப்பட்டார். உடனே அண்ணாமலை, இது மட்டும் தானா, வேற ஏதாவது மறைக்கிறாயா? எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லிவிடு. இந்த குடும்பத்திற்கு உண்மையாக இரு என்று சொன்னார். அதற்கு ரோகினி, அவ்வளவுதான் என்று தான் திருமணம் செய்த விஷயத்தை மறைத்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாட்டி, இனிமேல் நீ இந்த வீட்டிற்கு உண்மையாகவும், மனோஜிற்கு உண்மையாகவும் இருக்க வேண்டும். சத்தியம் செய் என்று சொல்கிறார். ஒரு நிமிடம் ரோகினி அமைதியாக இருக்கிறார். உடனே அண்ணாமலை, வேறு ஏதாவது சொல்லனுமா? என்று கேட்டதற்கு ரோகினி, எதுவும் இல்லை. நான் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன். நான் இந்த குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறார். இதையெல்லாம் பார்த்து விஜயாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. ரோகினி, முத்து-மீனா இருவரையும் முறைத்துக் கொண்டே ரூமிற்கு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் விஜயா, என்னால் ரோகினியை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று வழக்கம்போல கத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு பாட்டி, உன் மீதும் தவறிருக்கிறது. மருமகள்களை சமமாக நடத்து என்று திட்டுகிறார். அதற்குப்பின் ரூமில் ரோகினி, மனோஜ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ், நீ சொல்வதில் எது உண்மை என்று நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு நீ பொய் சொல்கிறாய். உன் மீது எனக்கு நம்பிக்கையும் இல்லை என்று பேசுகிறார். ரோகினி எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே மனோஜ் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் மாடியில் சுருதி, முத்து, மீனா, ரவி எல்லோரும் ரோகினி பஞ்சாயத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மனோஜ் கேட்டு வேதனைப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






