விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் செல்வம் வீட்டு விசேஷத்தில் எல்லோருமே குடித்துக் கொண்டு அமர்க்களம் செய்து இருந்தார்கள். இதனால் செல்வம் உறவினர்களுக்கும் முத்துவுக்கும் இடையே கலவரம் அதிகமாக, மீனா எவ்வளவு தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. பின் செல்வத்தின் உறவினர்கள் முத்துவை அடித்து அசிங்கப்படுத்தி வெளியே தள்ளி விட்டார்கள். அதன் பின் ரோகினி தன் தோழியுடன் சேந்து பிளாக்மெயில் மேனேஜரை பார்த்து பேசி இருந்தார்கள். அப்போது அவர், 30 லட்சம் வேணும் என்று மிரட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் சத்யா வாழ்க்கைக்காக மீனா சிட்டியை பார்த்து சண்டை போட்டார்.

அப்போது சண்டையில் சிட்டி, மீனாவை கீழே தள்ளியதால் தலையில் அடிப்பட்டது. அந்த சமயம் வந்த முத்து, சிட்டியை வெளுத்து வாங்கி விட்டு மீனாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். இதை எல்லாம் தெரிந்த சத்யா, சிட்டியை பார்த்து சண்டை போட்டு வந்து விட்டார். பின் ஹாஸ்பிடலில் மீனாவிடம் சத்யா மன்னிப்பு கேட்டு, வாக்குறுதி கொடுத்தார். பிறகு வீட்டிற்கு வந்த மீனாவை பார்த்தவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி விசாரிக்க, வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று முத்து சொல்லி சமாளித்தார்.
சிறகடிக்க ஆசை:
இந்த வாரம் ரோகினி, சிட்டியை சந்தித்து அந்த மேனேஜரை ஏதாவது பண்ண சொல்லி கேட்க, உடனே சிட்டி, உங்கள் மாமியாரின் பணம் திருடு போனதற்கு காரணம் மீனாவின் தம்பி சத்யா தான். அது முத்துவிற்கும் தெரியும். அது தொடர்பான வீடியோ முத்து போனில் இருக்கு. அதை வெளியே விட்டால் நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்கிறேன் என்று சொன்னவுடன் ரோகினி ஒத்துக் கொள்கிறார். பின் ரோகினி வீட்டிற்கு வந்து, மீனாவை பார்த்து இவர்களுக்கு நேரம் சரியில்லை என்று வன்மத்துடன் பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
இதனால் மீனா வருத்தப்பட்டார். நேற்று எபிசோட்டில் மீனா, மூத்து இருவருமே பூ விற்க ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சிட்டி, சத்யாவை பார்த்து பேச போனார். ஆனால், சத்யா திட்டி விட்டு சென்று விட்டார். இதனால் சிட்டி முத்துவை பழிவாங்க நினைத்தார். அப்போது முத்து-மீனா வண்டியில் போவதை சிட்டி பார்த்தார். பின் தன் வண்டியால் முத்து-மீனா ஸ்கூட்டி மீது மோத சிட்டி வேகமாக சென்றார். ஒரு கட்டத்தில் முத்து வண்டி மீது சிட்டி கார் மோத போனது.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து குறுக்கே வேறொரு வண்டி வந்ததால் முத்து-மீனா இருவருமே சிட்டியிடம் இருந்து தப்பித்து விட்டார்கள். பின் வீட்டில் முத்து,மீனா இருவரும் நடந்ததை பற்றி சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோகிணி, சிட்டி சொன்னதே நினைத்து பார்த்து முத்துவின் போனை எடுக்க முயற்சி செய்தார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், முத்து தன்னுடைய போனை சார்ஜ் போட்டு விட்டு குளிக்கப் போகிறார்.
https://www.youtube.com/watch?v=xECRxGqppnE
சீரியல் ப்ரோமோ:
இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி, முத்து போனை எடுத்து செக் பண்ண பார்க்கிறார். ஆட்கள் வருகிறார் என்று ரோகினி கட்டிலுக்கு அடியில் சென்று செக் பண்ணுகிறார். அப்போது சத்யா வீடியோ பார்த்து தன்னுடைய மொபைலுக்கு அனுப்ப நினைக்கும் போது ஸ்விட்ச் ஆப் ஆகிவிடுகிறது. பின் முத்து, வேலைக்கு செல்வதற்கு கட்டில் மேல் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அப்போது முத்து, என் போன் சார்ஜ் போட்டு இருக்கிறேன் எடுத்துக் கொண்டு வா என்றவுடன் மீனா, அங்கு இல்லை என்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் ரோகிணி இருக்கிறார்.






