TRPயில் பட்டையை கிளப்பும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
338
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. சீரியலில் கதாநாயகன் முத்து. கதாநாயகி மீனா. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். காரணம், முத்து படிக்கவில்லை, அவன் ஓவராக பேசுகிறான், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது.

-விளம்பரம்-

உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஒரு வழியாக ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. இதை பார்த்து முத்து, மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் விஜயாவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. மனோஜ் வேலை இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறார்.

சீரியல் கதை:

இப்படி இருக்கும் நிலையில் மீனாவின் தம்பி கல்லூரியில் படித்து வேலை செய்வதாக வீட்டில் பொய் சொல்லி சிட்டி உடன் தேவையில்லாத சவகாசம் வைத்துக்கொண்டு இருக்கிறார். இது முத்துவிற்கு தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன் அம்மாவிடம் பணத்தை திருடியது மீனாவின் தம்பி என்பதை முத்து தெரிந்து கொள்கிறார். இதை வீட்டில் சொன்னால் மீனாவிற்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லாமல் மீனா தம்பியிடம் முத்து பேசுகிறார். ஆனால், அவன் திமிராக முத்துவிடம் பேசி அனுப்புகிறார். பின் சிட்டி முத்துவின் நண்பர் வட்டி கட்டவில்லை என்று அவரை அடிக்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இதை பார்த்த முத்து சிட்டியை புரட்டி போட்டு எடுக்கிறார். அங்கு இருந்த மீனா தம்பி எதிர்த்து கேட்டதற்கு முத்து அவனின் கையை முறித்து விடுகிறார். இதனால் மீனா- முத்துக்கிடையே விரிசல் ஏற்படுகிறது. மேலும், சிட்டி-முத்து இடையே பிரச்சனை ஏற்பட்டு தன் காரை முத்து விற்று சிட்டி கடனை அடைகிறார். பின் முத்து ஆட்டோ ஓட்டுகிறார். இந்த உண்மை வீட்டுக்கு தெரிகிறது. ஆனால், முத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இந்த உண்மையை மீனா அறிந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் முத்து -மீனா இருவரையும் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று சிட்டி திட்டமிடுகிறார். இப்படி பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

நடிகர்கள் சம்பளம்:

இந்த நிலையில் சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒருநாள் வாங்கும் சம்பள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில்,

முத்து, மீனா- ரூ. 12 ஆயிரம்
அண்ணாமலை- ரூ. 8000 ஆயிரம்
விஜயா- ரூ. 8000 ஆயிரம்
ரோஹினி, மனோஜ்- ரூ. 6000 ஆயிரம்
ரவி, ஸ்ருதி- ரூ. 5000 ஆயிரம்
சத்யா, சீதா- ரூ. 3000 ஆயிரம்

Advertisement