விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ், நிறைய குடித்துவிட்டு நிலை தெரியாத அளவிற்கு தடுமாறிக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர் தான் மனோஜை பைக்கில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருக்க, வரும் வழியில் டிராபிக் போலீஸ் தடுத்து நிறுத்தி இருவரையுமே செக் பண்ணார்கள். ஆனால், மனோஜ் போதையில் போலீஸ் இடமே தகராறு செய்து கொண்டிருந்தார். மனோஜின் நண்பர் குடிக்கவில்லை என்றாலும் போலீஸ் அவரை ஊத சொல்லி கேட்டார்கள். இதனால் கோபப்பட்ட மனோஜ் போலீஸிடம் சண்டை போனார். பின் போலீஸ், மனோஜை கைது செய்து விட்டார்கள்.

போலீஸ் ஸ்டேஷனிலுமே மனோஜ் அமைதியாக இருக்காமல் போலீஸிடம் மன்னிப்பு கேட்க சொல்லி வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். உடனே அவர்கள் கோபத்தில் மனோஜின் சட்டையை கழட்டி ஓரமாக உட்கார வைத்து விட்டார்கள். ஆனாலுமே மனோஜ் அடங்காமல், என் தம்பி யார் தெரியுமா? அவன் வந்தால் ரகளையே நடக்கும் என்றெல்லாம் அலப்பறை செய்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மனோஜ் வீட்டிற்கு வரவில்லை என்று முத்து, அண்ணாமலை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை நினைத்து வித்யாவிடம் புலம்பி கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் விஷயத்தை அவருடைய நண்பர், முத்து- அண்ணாமலை இடம் சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே பதறி இருந்தார்கள். பின் முத்து- அண்ணாமலை இருவருமே போலீஸ் ஸ்டேஷன் வந்தார்கள். அங்கு மனோஜ் போலீஸ் இடம் அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து மன வேதனையில் அண்ணாமலை, குடும்ப பிரச்சனையால் தான் அவன் இப்படி பண்ணி விட்டான் என்று மன்னிப்பு கேட்டார். அந்த சமயம் பார்த்து அருண் வந்தார். அருணை பார்த்தவுடன் முத்து ஷாக் ஆனார். முத்துவின் அண்ணன் தான் மனோஜ் என்று தெரிந்தவுடன் வெளியே விடக்கூடாது என்று அருண் நினைத்தார்.

கடந்த வாரம் எபிசோட்:
உடனே அங்கு வந்து எஸ் ஐ, மனோஜை வெளியே விட சொன்னார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த மனோஜ் மீண்டும் அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு ரொம்பவே மனவேதனையாக இருந்தது. பின் அவர், நான் என் அம்மாவை வரவைக்கிறேன். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்று தன்னுடைய அம்மாவை அழைத்து வர சென்றார். இன்னொரு பக்கம் பஸ் ஸ்டாண்டில் சீதா, நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன் அருண், என் காதலுக்கு எப்போதுதான் பதில் சொல்லுவாய்? நீ என் பைக்கில் வந்து ஏறினால் என்னை காதலிக்கிறாய் என்று அர்த்தம் என்று சொல்ல, சீதாவும் பைக்கில் ஏறினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண், என் காதலை ஒத்துக் கொண்டாயா? என்று கேட்க, நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று சீதா விளையாடுகிறார். பின் சீதா, பாதியிலேயே விட்டு விடாதீர்கள் என்று சொன்னவுடன் அருண் கடைசிவரை உன்னுடன் தான் நான் சேர்ந்து வாழ்வேன் என்கிறார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே மனோஜின் நிலைமையை நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போ மீனா, உங்கள் அண்ணன் செய்வது ரொம்ப தவறு. ரோகினி பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்டு இருக்க வேண்டும். ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் எதுவுமே கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இது எல்லாம் கேட்ட மனோஜ், என் விஷயத்தைப் பற்றி பேச உங்கள் இருவருக்குமே உரிமை கிடையாது. உங்கள் வேலையை பாருங்கள் என்று கோபமாக திட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் ரோகினி, ஸ்ருதிக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது ஸ்ருதி, ரோகினி பற்றி தெரிந்த விஷயத்தை சொன்னவுடன் அவர் ஷாக் ஆகிறார். பாட்டியை வர வைக்கும் விஷயத்தை சொன்னவுடன் ரோகினிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






