விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ்-ரோகினி இருவரும், முத்துவால் தான் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். உடனே அண்ணாமலை, முத்து செய்தது சரிதான் என்று அவர்களுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அதற்குப் பின் ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், எனக்கு பணம் வேண்டும், இல்லையென்றால் உன்னை பற்றிய உண்மையை வீட்டில் சொல்லி விடுவேன் என்று வழக்கம்போல மிரட்டி இருந்தார். பின் சிட்டிக்கு போன் செய்த ரோகினி, மேனேஜர் ஃபோன் செய்ததை சொன்னார். அதற்கு சிட்டி,நீங்கள் எனக்கு முத்துவின் வண்டி சாவியை எடுத்து கொடுத்தால் அந்த மேனேஜர் உங்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

ரோகினி ஒத்துக்கொண்டார். பின் இரவு எல்லோரும் தூங்கிய பிறகு வீட்டிற்கு வந்த சிட்டிவிடம் ரோகினி முத்துவின் வண்டி சாவியை யாருக்கும் தெரியாமல் கொடுத்து விட்டார். பின் சிட்டி, முத்துவின் காரில் பிரச்சனை ஏற்படுமாறு செய்து வைத்தார். மறுநாள் காலையில் அண்ணாமலை அனாதை இல்லத்திற்கு தான் போடாத, தேவையில்லாத துணிகளை எல்லாம் கொடுத்தார். இதனால் வீட்டில் உள்ள மற்றவர்களுமே தங்களுடைய தேவையில்லாத துணிகளை கொடுக்க ஒத்துக் கொண்டார்கள். ஆனால், விஜயா மட்டும் முடியாது என்றார்.
சிறகடிக்க ஆசை:
சிட்டி, நான் முத்து காரின் பிரேக் ஒயரை கட் செய்து விட்டேன். அந்த கார் ஆயுள் முழுவதும் வெளியே வந்து விடும். நீங்கள் இருவரும் முத்துவின் கார் பக்கத்தில் சென்று உரசினால் போதும் வண்டி ஆக்சிடென்ட் ஆகி முத்து இறந்து விடுவான் என்று சொன்னார். இதனால் முத்து வண்டி எடுக்கிறானா? இல்லையா? என்று சிட்டி ஆட்கள் பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் சுருதி, முதன் முதலாக எல்லோருக்காகவும் உப்புமா சமைத்தார். இதனால் என்ன நடக்குமோ? என்று வீட்டில் உள்ளவர்கள் பயப்பட்டார்கள்.

கடந்த வாரம் எபிசோட்:
சமைத்து முடித்த சுருதி, எல்லோருக்குமே பரிமாறி இருந்தார். சுருதி சமைத்த சாப்பாடு தட்டிலே விழவில்லை. தட்டி தட்டி சாப்பாடு போட்டார் சுருதி. அதோடு யாராலும் அந்த உப்புமாவை சாப்பிட முடியவில்லை. இருந்தாலுமே ஸ்ருதி ஆசையாக சமைத்ததால் நன்றாக இருந்தது என்று பாராட்டி இருந்தார்கள். பின் சுருதி, தான் சமைத்ததை சாப்பிட்டு பார்த்து. நன்றாக இல்லை என்கிறார். இருந்தாலும் அண்ணாமலை சப்போராட்டாக பேசியதற்கு சுருதி சந்தோசப்பட்டார்கள். அதற்கு பின் முத்து, சவாரிக்கு கிளம்பும்போது காரின் மீது முட்டை சைக்கிள் மோதி விட்டது.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் காரின் மீது இருந்த உடைந்த முட்டையை எல்லாம் மீனா,முத்து, ரவி மூவருமே சேர்ந்து சுத்தம் செய்கிறார்கள். அதற்குப்பின் முத்து சவாரிக்கு கிளம்புகிறார். அப்போது கார் சாவி இந்த வீட்டில் இல்லை என்று மொத்தமும் தேடுகிறார். அப்போது ,சாவி ரவிடம் தான் இருந்திருக்கிறது. பின் ரவி சாவி கொண்டு வந்து முத்துவிடம் கொடுத்துவிட்டு செல்கிறார். அதற்குப் பின் முத்து சவாரிக்கு கிளம்புகிறார். அப்போது கார் பிரேக் பிடிக்கவில்லை என்பது முத்துவுக்கு தெரிகிறது. முத்து என்ன செய்வது என்று புரியாமல் பதறுகிறார். கார் எதிரியிலேயே குழந்தைகள் பஸ், பெரியவர்கள் என எல்லோருமே வந்து கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
தடுமாறி தடுமாறி முத்து கார் வருகிறது. ஒரு கட்டத்தில் முத்து ஒரு பைக்கின் மீது மோதி வண்டியை நிறுத்தி விடுகிறார். ஆனால், அந்த வண்டி அருண் உடையது. பின் கோபத்தில் அருண், வேண்டும் என்றே நீ என்னை இடிக்கத்தான் இப்படி செய்தாயோ என்று முத்துவை கைது செய்கிறார். முத்து எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே அங்கிருந்த போலீஸ் யாருமே கேட்கவில்லை. இதை எல்லாம் ஸ்ருதி அம்மா போனில் ரெக்கார்ட் செய்து விடுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை பார்த்து பேசுகிறார். ஆனால் மனோஜ், தன் அம்மாவிற்கு பயந்து பேச தயங்குகிறார். ரோஹினி எடுத்து சொல்லியும் மனோஜ் கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது






