விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, வீட்டில் தொடர்ந்து பிரச்சினை வந்து கொண்டிருப்பதால் பூஜை செய்யலாம் என்றார். அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் நீயே பார்த்து கொள் என்று சொன்னார். பின் மனோஜ்க்கு போன் செய்து ரோகினி ரொம்ப ரொமான்டிக்கா பேசி இருந்தார். மனோஜ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் ரோகிணி பேச்சைக் கேட்டு அமைதியாகவே இருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த ரவி, முத்துவிடம் மன்னிப்பு கேட்டார். முத்துவும் சமாதானம் செய்கிறார். இருந்தாலும் ரவிக்கு ரொம்ப கஷ்டமாகி விடுவதால் எமோஷனலாக பேசி இருந்தார்.

மாடியில் வாங்கி வந்த பியரை முத்து-மனோஜ்- ரவி குடித்துக்கொண்டிருந்தார்கள். பின் மூவருமே தங்கள் மனதுக்குள் இருக்கும் வேதனையை சொல்லி புலம்பி கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் ரவி மனதார முத்துவிடம் மன்னிப்பு கேட்டார். முத்து, ரவிக்கு ஆறுதல் சொல்லி அங்கிருந்து கிளம்பினார். இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மனோஜ்க்கு போன் செய்த ஒரு நபர், உங்கள் மனைவி ரோகினி பார்க்கில் யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
இதை பார்த்தால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லி ஏத்தி விட்டார். இதனால் மனோஜிற்கு பயங்கர கோபம் வந்தது. அந்த நபர் ரோகினி சொன்னதைப் போலவே செய்துவிட்டார். மனோஜ் பார்க்கிற்கு சென்று ரோகிணி செய்யும் வேலையை கையும் களவுமாக பிடிக்க நினைத்தார். இன்னொரு பக்கம் சீதா, தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது சீதாவின் கையில் அடிபட்டு இருப்பதை மீனா விசாரித்தார். பின் ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமல் சீதா அழுதார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதா, அருண் கோபத்தில் என்னை அடித்துவிட்டார். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு அடிக்கிறார். மாமா பெயரை சொன்னால் அவருக்கு கோபம் அதிகமாகி என்ன செய்கிறேன் என்று தெரியாமல் நடந்து கொள்கிறார் என்கிறார். பின் சீதாவிற்கு மீனா ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் ரோகினியை பார்ப்பதற்கு பார்க்கிங்க்கு மனோஜ் வந்திருக்கிறார். பின் ரோகினி வைத்த ஆட்கள் மனோஜை சுத்தி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அடிக்கப் போகிறார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, அவர் என்னுடைய கணவர். அடிக்காதீர்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் பார்க்கில் இருந்தவர்கள், சொந்த பொண்டாட்டியை சைட் அடிக்கிறாயா? என்று திட்டுகிறார். மனோஜ், அவர் என்னுடைய மனைவி தான் என்று சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் ஒரு ஆதாரமாக ரோகினி சேகரித்து வைத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் அருணின் வீட்டிற்கு சென்ற மீனா, உங்களுக்கும் என் கணவருக்கும் நிறைய பிரச்சனை இருக்கிறது. இது எதார்த்தமாக நடந்த விபத்திற்கு என் கணவர் காரணம் இல்ல. சீதாவுடன் சந்தோஷமாக வாழுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் பண்ணுகிறார். அதற்குப்பின் அண்ணாமலை, இந்த விவாகரத்து சீக்கிரமாக கிடைக்காது. வேறு ஏதாவது ஏற்பாடுகள் செய்கிறோம் என்கிறார். முத்து- மீனா இருவரும் ரோகிணி ரொம்ப புத்திசாலி. எது வேண்டுமானாலும் செய்வார் என்கிறார்கள்.






