விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வித்யா கணவர், ரோகினி தங்குவதற்கு
ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ரோகிணி எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அதற்குப்பின் ரோகினி, பார்வதி வீட்டிற்கு தான் சென்றார். அப்போது பார்வதி, நீ செய்தது மிகப்பெரிய தவறு. இருந்தாலும் உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது. இங்கு உன்னை தங்க வைத்தால் எனக்கும் விஜயாவிற்கும் பிரச்சனை வரும் என்று பணம் கொடுத்தார். ரோகிணி பணத்தை வாங்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் மனோஜ், ரோகினி செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே புலம்பி கத்திக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கஷ்டமாக இருந்தது. அதற்குப்பின் மீனா, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால், முத்து ஏற்றுக்கொள்ளவே இல்லை, மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். மீனா, எவ்வளவோ சொல்லி புரிய வைக்க பார்த்தார். ஆனால், முத்து கேட்கவில்லை. அதற்குப்பின் ரோகினி, சிந்தாமணி இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு சிந்தாமணி, ரோகினிக்கு ஆதரவாக பேசி
பேசினார். அதோடு ரோகினி தங்க இடம் கொடுத்தார்.
சிறகடிக்க ஆசை:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து பேசியதையெல்லாம் நினைத்து வருத்தப்பட்டு மீனா வந்து கொண்டிருக்கிறார். அப்போது மீனா மீது ஒரு கார் மோதும்படியாக வந்து நின்றுவிட்டது. ஆனால், அந்த காரில் இருந்த செல்வம் தான். பின் மீனா மயக்கம் போட்டு கீழே விழுகிறார். உடனே ஸ்ருதி- ரவி இருவரும் மீனாவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் போகிறார்கள். அப்போது மீனா சாப்பிடாததால் தான் மயக்கம் வந்தது என்று சொல்லிவிடுகிறார்கள். வீட்டில் எல்லோரும் சாப்பிட சொல்ல, மீனா மறுக்கிறார். அந்த சமயம் பார்த்து முத்து வீட்டிற்கு வருகிறார். முத்து, கோபமாக தான் மீனாவிடம் பேசுகிறார். மீனா, நான் செய்த தவறுக்கான தண்டனை தான் இது என்று சொல்லி அழுகிறார்.

இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் ரோகினி-சிந்தாமணி இதுவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போ ரோகினி, நான் இந்த நிலைமை இருப்பதற்கு காரணம் முத்து-மீனா. அவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும். எனக்கு மனோஜ் வேண்டும் என்று சொல்கிறார். சிந்தாமணி, விஜயா உங்கள் இருவரையும் சேர்த்து வைக்க மாட்டார் என்று சொல்கிறார். அதற்கு ரோகினி, மனோஜை அவர்களிடம் இருந்து நான் பிரித்து விடுவேன் என்றெல்லாம் வில்லியாக பேசுகிறார். சிந்தாமணி, நான் உனக்கு துணையாக இருக்கிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
ரோகினி சென்ற பிறகு சிந்தாமணி, இவளை வைத்து தான் நான் அந்த வீட்டை எழுதி வாங்கணும். இவள் எனக்கு ஒரு பகடைக்காய் என்று ஒரு புது திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் மீனாவின் உடல் நிலை அறிந்து அண்ணாமலை வீட்டிற்கு வந்துவிடுகிறார். பின் அண்ணாமலை, மீனா- முத்துவிற்கு அறிவுரை சொல்லி சாப்பிட சொல்கிறார். பின் முத்து கொஞ்சம் சமாதானமாகி மீனாவை சாப்பிட சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






