விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மீனாவையும் அவருடைய தொழிலையும் கிண்டல் அடித்து பேசி இருந்தார். பின் அந்த இடத்திற்கு ரோகிணி வந்தார். ரோகினியை பார்த்தவுடன் மொத்த குடும்பமும் கொந்தளிக்கிறது.
விஜயா, எதற்காக வந்தாய்? என்று கேட்டார். மீனா, மேனேஜர் வர சொன்னார் என்று சொல்லிவிட்டு ஓரமாக போய் நிற்கிறார். பின் அந்த இடத்திற்கு பிளாட்டின் மேனேஜர் வந்தார். அவர் முத்து,மீனாவிடம் பேசிவிட்டு பூஜையை தொடங்க சொன்னார். கடை திறக்கும் பூஜையை சிறப்பாக செய்தார்கள்.

நல்லபடியாக மீனாவின் பூக்கடையை அண்ணாமலை- விஜயா இருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்கள். அதற்குப்பின் மனோஜிடம் மேனேஜர், இந்த எல்லா பில்டிங்க்கும் உங்களுடைய ஷோரூமில் இருந்து பொருள்களை வாங்குகிறோம். அதற்கு காரணம் ரோகினி தான். ரெண்டு பேரும் சேர்ந்து இந்த ஆர்டரை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். இதை பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. ரோகினி, அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் லைஃபிலும் நான்தான் பார்டர் என்றார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து நடந்ததை சொன்னார்கள். வக்கீல், இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், அவருடன் நெருங்கி பழக வேண்டாம். அது தான் தேவை என்றார். இன்னொரு பக்கம் முத்து, செல்வம் இருவரும் நீத்து, ரெஸ்டாரன்ட்க்கு சென்று பேசி இருந்தார்கள். நீத்து, நான் ரவியை காதலிப்பேன் என்றார். முத்து, இனி நீ சுருதி- ரவி வாழ்க்கையில் தலையிட்டால் நீயும் உன் கடையும் இருக்க மாட்டாய் என்று மிரட்டி விட்டு வந்தார். அதற்குப்பின் ஷோரூமிற்கு ரோகினி மார்டன் உடையில் கவர்ச்சியாக வந்திருந்தார். இதை பார்த்த மனோஜ் கண்டுகொள்ளாமல் இருக்க முயற்சி செய்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மர்ம நபர்கள் நீத்துவின் கடைக்கு தீவைத்து எரித்து விடுகிறார்கள். அதோடு நீத்துவின் வீட்டுக்கு சென்று அவருடைய காலையும் உடைத்து விடுகிறார்கள். யார் செய்தது என்று தெரியவில்லை. அதற்கு பின் நீத்து ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை அறிந்த ரவி அங்கு செல்கிறார். அப்போது நீத்து, முத்து தான் இதை செய்தது என்று சொல்கிறார். ரவியால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் முத்துமிரட்டி போன விஷயத்தை நீத்து சொல்வதால் ரவி நம்பி விடுகிறார். அப்போது அங்கு வந்த போலீஸிடம் நீத்து, இது தற்செயலாக நடந்த விபத்து என்று சொல்லி ரவி இடம் நல்ல பெயரை வாங்குவதற்காக முத்துவை காப்பாற்றுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு வந்த ரவி, முத்துவின் சட்டையை பிடித்து சண்டைக்கு போகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ரவியை தடுக்கிறார்கள். இருந்தாலும் கோபத்தில் ரவி, முத்துவை திட்டி நடந்தது எல்லாம் சொல்கிறார். முத்து, நான் எதுவும் செய்யவில்லை என்று சொல்கிறார். இருந்தாலும் ரவி கேட்கவில்லை. இதுதான் சந்தர்ப்பம் என்று மனோஜ் ஏத்தி விடுகிறார். அண்ணாமலை, மீனா இருவரும் முத்துவை நம்புகிறார்கள். ஆனால், ரவி நம்பவே இல்லை. இதை யார் செய்தது? என்று கண்டுபிடிக்கணும் முத்து-மீனா இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் தனக்கு கிடைத்த புது ஆர்டரை ரோகினி, மனோஜிடம் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






