விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, தன்னுடைய திட்டம் எல்லாம் சொதப்பிவிட்டதே என்று கோபப்பட்டார். முத்து, மனோஜை திட்டி அங்கிருந்து அழைத்து செல்கிறார். மீனாவுமே ரோகிணிக்கு வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து, ஹோட்டலில் நடந்தது எல்லாம் சொல்கிறார். விஜயா, மனோஜை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். ரவி, அண்ணாமலை எல்லோருமே திட்டினார்கள். பின் விஜயா, இதற்கெல்லாம் காரணம் மீனாவுடைய ராசி தான். அவள் இந்த வீட்டை விட்டு போனால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்றார்.

விஜயா, மீனாவை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். அண்ணாமலை, விஜயாவை திட்டி அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் ஸ்ருதி ஹோட்டலுக்கு வந்த மீனா, வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார். அப்போது வந்த நீத்து, ரவியை தனியாக அழைத்து சென்று ஹோட்டல் மீதி சம்பள பணத்தை கொடுத்துவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். ரவியால் எதுவும் சொல்ல முடியவில்லை.
சிறகடிக்க ஆசை:
சுருதி, ரவியை திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அண்ணாமலை வாக்கிங் வந்து கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக பைக்கை ஓட்டி வந்த நபர் அண்ணாமலை மீது மோதி விட்டார். இதனால் அண்ணாமலை, ஹாஸ்பிடலில் இருக்கிறார். இதை அறிந்த மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு சென்று விட்டார்கள். விஜயா, இது தான் சந்தர்ப்பம் என்று மீனாவின் ராசியை, குணத்தையும் ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். மீனா ரொம்ப உடைந்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா ரொம்ப மோசமாக மீனாவை திட்டி கொண்டிருக்கிறார். ரவி, முத்து எவ்வளவோ தடுத்துமே விஜயா கேட்கவில்லை. மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விஜயா சொல்கிறார். இதனால் உடைந்து போன மீனா, ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பி விடுகிறார். பின் தன்னுடைய பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, ரோகினி இடம் நடந்ததை எல்லாம் சொல்கிறார். பின் விஜயாவிற்கு போன் செய்த சிந்தாமணி, மீனாவால் தான் இந்த பிரச்சனை என்று ஏற்றி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் விஜயாவும் ரொம்பவே பதறுகிறார். பின் அண்ணாமலை கண்விழித்து விடுகிறார். அப்போது எல்லோருமே அண்ணாமலையை பார்த்து பேசுகிறார்கள். முத்து நடந்ததை சொல்கிறார். விஜயா, மீனாவின் மீது தான் கோபப்படுகிறார். பின் அண்ணாமலையின் உடல் நிலைக்காக முத்து எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் அம்மாவிற்கு வீட்டிற்கு வந்த மீனா, நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனலாக கதறி அழுகிறார்.






