வீட்டை விட்டு வெளியேறிய ரோகிணி, கலவரத்தில் முத்து குடும்பம், அடுத்து என்ன? பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்

0
684
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் கதாநாயகன் முத்து வீட்டில் அவருடைய தாய், அவருடைய முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும் தான் சப்போர்ட்செய்கிறார். முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்று ஒதுக்கி வைக்கிறார். அதோடு முத்து தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான்.

-விளம்பரம்-

இதனாலே சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது வெறுப்பு கோபம் இருக்கிறது. தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என்று ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சீரியலில் முத்துவின் தம்பி ரவி காதலித்த பணக்கார பெண் ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார். ஏற்கனவே அந்த பணக்கார பெண்ணின் அப்பாவிற்கும் அண்ணாமலைக்கு இடையே பல பிரச்சினைகள் இருக்கிறது. ரவி-சுருதி திருமணத்தால் பல கலவரங்கள் வருகிறது. தற்போது சீரியலில் ரவி- ஸ்ருதி இருவரையும் மீனா வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்.

சீரியல் கதை:

மேலும், வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. காலையில் முதல் இரவு தூங்கும் வரை வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறார். மீனாவும் எதுவும் பேச முடியாமல் மனதிற்குள் அழுது கொண்டு செய்து கொண்டிருக்கிறார். உடனே அடுத்த நாள் காலையில் மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சி அடைகிறார்கள். சொல்ல போனால், விஜயாவிற்கு கோபம் தாங்க முடியவில்லை.

-விளம்பரம்-

நேற்றைய எபிசோட்:

விஜயா என்ன செய்வது என்று புரியாமல் புலம்புகிறார். நேற்று எபிசோடில் மனோஜ் வீட்டில் வேலை பார்க்கிறேன் என்று பொய் சொல்லிக்கொண்டு பார்க்கில் சாப்பிட்டு, விளையாடிக் கொண்டு தூங்குவதை முத்து பார்த்து விடுகிறார். அதை முத்து வீடியோ எடுத்து வீட்டில் போடுகிறார். இதை பார்த்த வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோவில், எல்லோருமே மனோஜை பயங்கரமாக திட்டுகிறார்கள். ரோகிணி எதுவும் பேச முடியாமல் அமைதியாக அழுகிறார்.

இன்றைய எபிசோட்:

பின் மனோஜூக்கு உறுதுணையாக இருந்தது அவருடைய அம்மா என்றும் தெரிய வருகிறது. மேலும், மனோஜ், ரோகினியை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், ரோகிணி திட்டி அழுது தன்னுடைய தோழி வீட்டுக்கு சென்று விடுகிறார். அங்கேயும் அழுது புலம்பி கொண்டிருக்கிறார். உடனே, ரோகிணி எங்கே சென்று விடுகிறார். இந்த தகவலை அவரின் தோழி மனோஜின் குடும்பத்திற்கு சொல்கிறார்கள். இதனால் முத்து மனோஜர் இடையே சண்டை வருகிறது. இனி ரோகினி எங்கே சென்று இருப்பார்? மனோஜ்- முத்து இருவரும் ரோகிணியை கண்டுபிடிப்பார்களா? ரோகிணியின் உண்மையான முகம் தெரிய வருமா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement