விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் ‘சிறகடிக்க ஆசை’. சீரியலில் மனோஜ், பணத்தை ஏமாந்ததால் மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்து விடுகிறார். இதனால் வீட்டில் பெரிய கலவரம் வெடித்தது. இறுதியுயில் மனோஜ் மற்றும் விஜயா மாட்டிக் கொண்டார்கள். இதனால் கோபமடைந்த அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று விஜயாவிடம் கூறி விடுகிறார். பின் விஜயா, தான் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கிக் கொள் என்று கேவலமாக பேசி இருந்தார். பின் அந்த 4 லட்சத்திற்கு ரோகிணி பொறுப்பு ஏற்று 2 லட்ச ரூபாய் முத்துவிடம் கொடுத்து விட்டார். மீதி பணத்தை சீக்கிரம் தருகிறேன் என்று ரோகினி சொல்கிறார்.
வழக்கம் போல், விஜயா எல்லாத்திற்கும் காரணம் மீனா தான் என்று திட்டுகிறார். இதை பார்த்த சுருதி, விஜயாவை வெளுத்து வாங்குகிறார். இதனால் விஜயாவிற்கு சுருதி மேல் பயங்கர கோபம் வருகிறது. கடந்த வாரம் இந்த பிரச்சனையை முடிக்க முத்து பாட்டியை வரவழைத்து விடுகிறார். பாட்டி வந்ததும் அண்ணாமலையை சமாதானப்படுத்தி விஜயாவிடம் பேச வைக்கிறார். விஜயாவும் அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்கிறார். கடைசியில் முத்து, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார். பாட்டியும் இது நல்ல யோசனை, நீ மாதம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடு என்று மனோஜிடம் கூறுகிறார்.
சிறகடிக்க ஆசை:
மேலும், மனோஜியிடமிருந்து பணத்தை வாங்கிக் கொடுப்பது விஜயாவின் பொறுப்பு என்றும் சொல்லிவிடுகிறார். கடைசியில் விஜயா ரோகினிடம், உன் அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து விடு என்று கூறுகிறார். ரோகினி என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார். பின் முத்து புது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து விஜயா நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார். விஜயா மற்றும் அண்ணாமலையை காரில் ஏற்றி கோயிலுக்கு முத்து அழைத்துச் செல்கிறார். எப்படியாவது அப்பா, அம்மாவை சேர்த்து வைக்க வேண்டும் என்று முத்து நினைக்கிறார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம், மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதைப் பார்த்து பயந்த மனோஜிடம், இது யாரோ பிராங்க் பண்றாங்க, நீ பயப்படாதே என்று ரோகிணி ஆறுதல் கூறுகிறார். ஒரு வழியாக கணவன் மனைவிக்குள் சண்டை வந்தா பேசாம இருக்க கூடாது என்று பாட்டி சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்புகிறார். சுருதி நான் குழந்தை பெத்துக்க மாட்டேன், வாடகை தாய் மூலமாக குழந்தை பெத்துக்கலாம் என்று சொல்ல, அதைக் கேட்டு ரவி அதிர்ச்சி ஆகிறார். மறுபக்கம் தனக்கு வந்த மொட்டை கடுதாசி, விஜயா தான் அனுப்பி இருப்பார் என்று மனோஜ் சந்தேகப்படுகிறார். அதைக் கேட்ட விஜயா, உனக்கு போய் சப்போர்ட் பண்ணேன் பாரு என்று திட்டுகிறார்.
இன்றைய எபிசோட்:
கடைசியில் முத்து வாங்கிய புதிய காரை ஓட்டுவதற்காக முத்துவின் நண்பர் வீட்டுக்கு வருகிறார். அண்ணாமலை கார் சாவியை ஆசிர்வாதம் பண்ணி அந்த பையனிடம் கொடுக்கிறார். இன்னொரு பக்கம், மனோஜ் தனக்கு வந்த மொட்டை கடுதாசி நினைத்து பயந்து சாமியார் ஒருவரை பார்த்து பேசுகிறார். அவர் சில விஷயங்களை செய்ய சொல்கிறார். அதை மனோஜ் செய்கிறார். வீட்டில் முத்து, வீடு கட்டுவதற்காக உண்டியலை தன் அப்பாவிடம் காட்டுகிறார். இதற்கு விஜயா, பிச்சை எடுக்கப் போகிறீர்களா, கடைசியில் இதற்கு தான் வருவீர்கள் என்று தெரியும் போங்க என்று சொன்னவுடன் மனோஜ் வருகிறார். அதை பார்த்தவுடன் பிச்சைக்காரன் வந்துட்டான் என்று முத்து கத்துகிறார். மனோஜ், என்னிடம் ஏதும் கேட்காதீர்கள்.
நெட்டிசன்கள் கிண்டல்:
நான் ஒரு காரணமாக தான் செய்திருக்கிறேன் என்று சொல்லி உள்ளே சென்று விடுகிறார். அதுமட்டுமில்லாமல் முத்து புது கார் வாங்கியதற்கு, நீ பெரிய தொழிலதிபராக வருவாய் என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். விஜயா, ரோகினி, மனோஜ் மூவருமே கிண்டலடித்து கேலி பேசுகிறார்கள். அதற்கு மீனா கோபப்பட்டு, என் வீட்டுக்காரர் பெரிய தொழிலதிபர் ஆவார் என்று சபதம் போட பார்க்கிறார். முத்து, அது வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார். தற்போது இதைத்தான் நெட்டிசன்கள், போட்டிருக்கும் சபதம் எல்லாம் முடியவில்லை. அதற்குள் இன்னொரு சபதமா? என்று கிண்டல் அடித்திருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாகவே மீனா உடைய கதாபாத்திரத்தை கிண்டல் கேலி செய்து டம்மி ஆக்க நினைக்கிறார்கள்.