கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜை கண்டதும் முத்து மற்றும் மீனா செய்த செயல். பரபரக்கும் சிறகடிக்க ஆசை

0
246
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்துவை கண்டால் அவருக்கு பிடிக்காது. காரணம், முத்து தன் தந்தைக்கு ஆதரவாக நிற்பதாலும், உண்மையாக இருப்பதாலும் அவருக்கு பிடிக்கவில்லை. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்த வாரம் சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் நடந்தது. இதில் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள். ஆனால், மீனா, ஸ்ருதியின் தங்க செயினை திருடி விட்டார் என்று பழி போடுகிறார் சுருதி அப்பா. பின் அனைவர் முன்னாடியும் மீனாவை அசிங்கப்படுத்துகிறார். ஆனால் மீனா, நான் அதை செய்ய திருடவில்லை, சுருதியிடம் கொடுக்கப் போனேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார். இதனால் முத்து, ஸ்ருதியின் அப்பாவை அடித்து விடுகிறார். இதை பார்த்த ஸ்ருதி, வீட்டிற்கு வரமாட்டேன் என்று அம்மா வீட்டிற்கு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

கோபத்தில் விஜயா வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின் மீனா, சுருதியை சந்தித்து பேசுகிறார். இன்னொரு பக்கம் முத்து, ரவியை சந்தித்து பேசுகிறார். பின் ரோஹிணி இடம் தன் அப்பா குறித்து விசாரித்து விஜயா கோபப்படுகிறார். ரோகினி அப்பா சிறையில் இருப்பதாக அவருடைய மாமா பொய் சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகிவிடுகிறார்கள். அதற்குப் பின் பார்லருக்கு வரும் மனோஜ், ரோகினி இடம் பணம் கேட்கிறார். இதனால் கடுப்பான ரோகினி உன்னுடைய அப்பா, அம்மாவிடம் கேளு என்று சொல்லி அனுப்பி விடுகிறார். அதே போல் மனோஜம் வீட்டில் வந்து பணம் கேட்கிறார். உடனே அண்ணாமலை, இங்கே வேலை தேடிக்கொள் என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

இருந்தும் விடாமல் மனோஜ் பணம் கேட்கிறார். இதனால் கடுப்பான விஜயா, என்னுடைய அப்பா எனக்காக தந்த வீடு. யாருக்காகவும் கொடுக்க முடியாது என்று கோபமாக பேசுகிறார். அந்த சமயம் பார்த்து ரோகினி வந்தவுடன் விஜயா, உன் அப்பா வெளியில் வந்த பின்னால் மனோஜ்க்கு பணம் வாங்கி கொடு. அதுவரையும் மனோஜ் இங்கேயே வேலை பார்க்கட்டும் என்று கோபமாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு முத்து- அண்ணாமலை இருவருமே ஷாக் ஆகி அமைதியாகி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்ருதியை, விச்சு தொந்தரவு செய்கிறார். இதை பார்த்த முத்து, அவரை அடித்து சுருதியை காப்பாற்றுகிறார். பின் தன் தம்பியின் நிலைமை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். பின் மனோஜ், பணம் வேண்டும் என்று தன்னுடைய பார்க் நண்பரிடம் கேட்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

அவர் ஒரு சாமியாரிடம் கூட்டிட்டு கொண்டு அறிவுரை சொல்கிறார். இதோடு சீரியல் முடிகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புது ப்ரோமோவில், மனோஜ் கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த மீனா மனோஜை பார்த்து விடுகிறார். பின் முத்துவிற்கு ஃபோன் செய்து கோயிலுக்கு வர வைக்கிறார் மீனா. கோயிலுக்கு வந்த முத்து, மனோஜை திட்டி வீட்டிற்கு அழைத்து வருகிறார். மனோஜின் நிலையை பார்த்து அவருடைய அப்பா – அம்மா இருவருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். இனி வரும் நாட்களில் மனோஜ் பிச்சை எடுக்க காரணம் என்ன? மனோஜ் திருந்துவாரா? ஸ்ருதி மனம் மாறி வீட்டுக்கு வருவாரா? போன்ற அடுத்தடுத்த சுவாரஸ்யங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement