உங்க தகவல் பரிமாற்றம் முடிஞ்சதா, என்ன ஆள விடு – ரசிகர்களின் ஆதரவை பெரும் சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்ஸ்

0
217
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. சீரியலில் கதாநாயகன் முத்து. கதாநாயகி மீனா. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். காரணம், முத்து படிக்கவில்லை, அவன் ஓவராக பேசுகிறான், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஒரு வழியாக ஏற்று கொண்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. இதை பார்த்து முத்து, மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் விஜயாவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. மனோஜ் வேலை இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மீனாவின் தம்பி கல்லூரியில் படித்து வேலை செய்வதாக வீட்டில் பொய் சொல்லி சிட்டி உடன் தேவையில்லாத சவகாசம் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

சீரியல் கதை:

இது முத்துவிற்கு தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன் அம்மாவிடம் பணத்தை திருடியது மீனாவின் தம்பி என்பதை முத்து தெரிந்து கொள்கிறார். இதை வீட்டில் சொன்னால் மீனாவிற்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லாமல் மீனா தம்பியிடம் முத்து பேசுகிறார். ஆனால், அவன் திமிராக முத்துவிடம் பேசி அனுப்புகிறார். பின் சிட்டி முத்துவின் நண்பர் வட்டி கட்டவில்லை என்று அவரை அடிக்கிறார். இதை பார்த்த முத்து சிட்டியை புரட்டி போட்டு எடுக்கிறார். அங்கு இருந்த மீனா தம்பி எதிர்த்து கேட்டதற்கு முத்து அவனின் கையை முறித்து விடுகிறார். இதனால் மீனா- முத்துக்கிடையே விரிசல் ஏற்படுகிறது.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

மேலும், சிட்டி-முத்து இடையே பிரச்சனை ஏற்பட்டு தன் காரை முத்து விற்று சிட்டி கடனை அடைகிறார். பின் முத்து ஆட்டோ ஓட்டுகிறார். இந்த உண்மை வீட்டுக்கு தெரிகிறது. ஆனால், முத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இந்த உண்மையை மீனா அறிந்து கொள்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மீனா- முத்து இடையே சத்யாவால் மீண்டும் சண்டை வருகிறது. பிறகு முத்துவிற்கு பெரிய மாலை ஆர்டர் கிடைக்கிறது. இதை மீனாவிடம் சொல்லாமல் அவருடைய அப்பாவிடம் சொல்லி மீனாவிடம் சொல்கிறார். இருவருமே மாற்றி மாற்றி தகவல் பரிமாறும் சீன் நன்றாக இருக்கிறது.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம், ரோகினி- மனோஜ் ரோட்டில் நடந்து கொண்டு செல்கிறார்கள். வழக்கம்போல் மனோஜ் பிசினஸ் செய்யலாம் என்றெல்லாம் பில்டப் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சில வருடங்களுக்கு முன்பு வங்கியில் ரோகிணி லோன் வாங்கிய விவரம் சம்பந்தமாக அவரை பேங்க்காரர்கள் ரோடில் சண்டை வாங்குகிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் ரோகினி அமைதியாக பேசுகிறார். பின் மனோஜ்- ரோகினி இருவரையும் போட்டோ எடுத்துக்கொண்டு பணத்தை செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறார். இனிவரும் நாட்களில் ரோகிணியின் உண்மை முகம் மனோஜ் அறிவாரா? மனோஜ் வேலைக்கு செல்வாரா? மீனா- முத்து இடையே பிரச்சனை தீருமா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சூப்பராக சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement