விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, பப்பரப்பா மனோஜ் என்று கிண்டலாகவே சொல்லி கூப்பிட்டார். இன்னொரு பக்கம் கிரிஷ் ஸ்கூலில் ஒழுங்காக படிக்காமல், பொய் பேசுதல், ரவுடித்தனம் செய்கிறான், ஏமாற்றுகிறான் என்று புகார் கொடுத்தார்கள். இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொன்னார். இதைக்கேட்டு ஷாக் ஆன ரோகிணி, கிருஷிடம் விசாரித்தார். ஆனால், கிரிஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். ரோகினி அம்மா, நீ ஒழுங்கா குழந்தையை கவனி. அவனை கண்டுகொள்ளாததால் இப்படி எல்லாம் செய்கிறான் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். ஆனால், ரோகிணி அதை கேட்டுக் கொள்ளவில்லை.

ரோகிணி, யாரிடம் இப்படி பொய் பேச கற்றுக் கொண்டாய்? எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்டார். கிரிஷ், உன்னிடம் தான் நான் கற்றுக் கொண்டேன். நீ தான் என்னை பொய் பேச சொன்னாய். என்னிடம் எல்லாரிடமும் நீ கோபப்படுகிறாய் என்று ரோகிணி தவறை சுட்டிக்காட்டினார். எதுவும் பேசாமல் அங்கிருந்து அழுது கொண்டே ரோகினி வெளியே வந்து விட்டார். பின் தன் மகனின் வாழ்க்கை தன்னாலே கெட்டுப் போனது நினைத்து ரோகினி வருத்தப்பட்டார். அது மட்டும் இல்லாமல் தன் மகனை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் ரோகினி நினைத்தார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் சத்யா- ரேகா இருவருக்கும் திருமணம் செய்வது பற்றி வீட்டில் பேசி இருந்தார்கள். விஜயா, சீக்கிரமாகவே திருமணம் ஏற்பாடு செய். அந்த சிந்தாமணி முகத்தில் கறியை பூச வேண்டும் என்றார். பின் தாம்பூல தட்டோடு சிந்தாமணியின் வீட்டிற்கு சென்று ரேகா-சத்யா திருமணத்தை பற்றி முத்து-மீனா பேசி இருந்தார்கள். இதனால் கொந்தளித்த சிந்தாமணி, என்னை மீறி நீ எப்படி திருமணத்தை நடத்துகிறாய்? என்று சவால் விட்டார். முத்து, கண்டிப்பாக இந்த திருமணம் நடக்கும் என்று பதிலுக்கு சவால் விட்டு வந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சத்யா, ரேகாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் முத்து-மீனா செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சிந்தாமணியும் அவருடைய கணவரும் திருமணத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று தங்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். அதற்குப் பின் மனோஜ், கனகாவின் அம்மா சொன்ன ப்ரோபசல் பற்றி என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார். அப்போது வந்த ஜோதிடர், இது உங்களுக்கு நல்ல வாய்ப்பு. அந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மனோஜ் கடைக்கு வந்த ரோகிணி, நீ என்னிடம் எப்போதும் வரப்போவதில்லை. நீ உன்னுடைய அம்மாவை பற்றி யோசிக்கிறாய். நான் என் மகனைப் பற்றி யோசிக்க விரும்புகிறேன். ஐந்து லட்சம் பணத்தை கொடுத்துவிடு. நான் விவாகரத்து கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார். இதைக்கேட்டு மனோஜிக்கு கஷ்டமாக இருக்கிறது. பின் வீட்டிற்கு சென்ற மனோஜ், ரோகினி உடன் இருந்த நினைவுகளை எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். ரோகினிக்கு விவாகரத்து கொடுப்பதா? கனகாவை திருமணம் செய்து கொள்வதா? என்று புரியாமல் குழம்பி போய் இருக்கிறார் மனோஜ்.






