விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று கேட்டார். அதற்கு முத்து, தன்னுடைய ஃபிளாஷ்பேக்கை சொன்னார். அப்போது முத்துவின் சிறு வயதில் விஜயா ஒரு ஜோசியரை சந்தித்து பேசினார். அப்போது ஜோசியர், முத்து உங்களுடன் இருந்தால் உங்கள் வீட்டில் யாராவது உயிருக்கு ஆபத்து வரும். அவர் ஆறு வருடம் உங்களை விட்டு பிரிந்து இருக்கணும். அப்படி இருந்தால் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் என்றார். இதை பற்றி விஜயா, அண்ணாமலை இடம் சொன்னார்.

இதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்றாலும் விஜயாவின் பயத்திற்காக ஒத்துக் கொண்டார்.
அதற்குப்பின் முத்துவை அழைத்துக் கொண்டு பாட்டியின் வீட்டிற்கு அண்ணாமலை, விஜயா வந்தார்கள். அப்போது நடந்ததை பாட்டியிடம் விஜயா சொன்னார். பாட்டியுமே ஒத்துக் கொண்டார். ஆனால், முத்து தன்னுடைய அம்மாவை விட்டு பிரியா விருப்பம் இல்லாமல் கதறி அழுதார். இருந்தாலும் ஜோசியர் சொன்னதற்காக அங்கிருந்து விஜயா கிளம்பி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்துவை பார்க்க அண்ணாமலை தான் அடிக்கடி வந்தார். ஆனால், ஜோசியர் சொன்னதால் விஜயா வரவே இல்லை. இதனால் முத்துவிற்கு தன் அம்மாவின் மீது கோபம் வந்தது. முத்து தன்னுடன் விளையாடும் பசங்களுடன் சண்டை போடுவதை பார்த்து விஜயா வருத்தப்பட்டார். அதற்கு பின் விஜயா, முத்துவை பற்றி கவலைப்படவே இல்லை. முத்துவும் தன் பாட்டி வீட்டில் சந்தோசமாக இருந்தார். பின் ஆறு வருடம் கழித்து முத்துவும் வளர்ந்து விட்டார். முத்துவை அழைத்து போக விஜயா, அண்ணாமலை இருவருமே பாட்டி வீட்டுக்கு வந்தார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது முத்து, நான் பாட்டியுடன் இருக்கிறேன் வரமாட்டேன் என்று அடம் பிடித்தார். இருந்தாலுமே வலுக்கட்டாயமாக விஜயா, முத்துவை அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் மனோஜ் வேண்டும் என்று முத்துவை வெறுப்பேற்றி பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபத்தில் முத்து தட்டை தூக்கி எறிந்து விட்டார். முத்துவிற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. உடனே விஜயா, முத்துவிற்கு காலில் சூடு போட்டு விட்டார். வேதனையில் முத்து தன்னுடைய பாட்டிற்கு ஃபோன் செய்து அழுது புலம்பினார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் ஒவ்வொரு பிரச்சனையையும் செய்துவிட்டு அதை முத்துமேல் பழி போட்டு விடுகிறார். இதனால் கோபத்தில் விஜயா, என்ன என்று கூட விசாரிக்காமல் முத்துவை தான் அடிக்கிறார். இதனால் மனோஜ் வீட்டில் மட்டுமில்லாமல் பள்ளியிலுமே படிக்கும் மாணவர்களுடன் பிரச்சனை செய்துவிட்டு முத்து மீது பழி போட்டு விடுகிறார். பின் பள்ளியில் தன்னைவிட அதிகமாக மதிப்பெண் எடுத்த மாணவனை மனோஜ் கல் எடுத்து அடிக்க போகிறார். அந்த சமயம் பார்த்து ஹெட்மாஸ்டர் தலையில் விழுந்ததால் மனோஜ் ஓடி விடுகிறார். முத்து தான் இதை செய்தான் என்று எல்லோரிடமும் மனோஜ் வீண் பழி சுமத்தி விடுகிறார். இதனால் கோபத்தில் விஜயாவுமே முத்துவை தான் அடிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






