விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் அம்மா ஒரு ஜோசியரை வீட்டிற்கு வரவைத்து மீனாவின் ஜாதகத்தை பார்க்க சொன்னார். அவர், ராசி எல்லாம் எந்த உயிருக்கும் ஆபத்து வராது. உங்கள் வீட்டில் ஒரு பெரிய கெட்டது நடக்கப்போகிறது. அதற்கு உன் மாமியார் சுமங்கலிகளை அழைத்து ஒரு பூஜை செய்தால் போதும் மற்றபடி வேற எந்த பிரச்சினையும் நடக்காது என்றார். மீனா, இதை நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பார்வதி ஆன்ட்டி மூலமாக சொல்ல வைக்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதியை சந்திக்க சென்றார்.

மீனாவை வீட்டை விட்டு அனுப்ப சொல்லி பார்வதியிடம் கேட்டார். பார்வதி முடியாது என்றார். இதனால் கோபப்பட்டு விஜயா வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா ஜாதகம் பார்த்த விஷயத்தையும், ஜோசியர் வீட்டில் விளக்கேற்ற சொல்லி பூஜை செய்ய சொன்னதையும் சொன்னார். விஜயா ஒத்துக்கொள்ளவில்லை. மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் விஜயா. ஆனால், அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை. முத்து- ரவி எல்லோருமே அறிவுரை சொல்லியுமே விஜயா ஏற்றுக் கொள்ளவில்லை. பின் அண்ணாமலை, விஜயாவை திட்டி அனுப்பி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் மனோஜ், ரோகினி சந்திக்க ஹோட்டல் போனார். அங்கு மனோஜ், விவாகரத்து கொடுக்க விருப்பம் என்று ஒரு டாக்குமெண்ட்டை ரெடி பண்ணி அதில் கையெழுத்து போட சொன்னார். ரோகிணி, அதற்கு முன்பு நான் கொடுக்கும் டாக்குமெண்டில் கையெழுத்து போடு. அதில் விவாகரத்து வேண்டாம் என்று எழுதி இருக்கிறது. மனோஜ் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. உடனே ரோகினி, நீ கையெழுத்து போடவில்லை என்றால் நான் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். மனோஜ் பயந்து வெளியே தப்பிக்க பார்த்தார். ரோகினி விடவில்லை. பாத்ரூமுக்கு சென்ற மனோஜ், தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து சொன்னார்

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகிணி தன்னை பிளாக்மெயில் செய்யும் விஷயத்தைப் பற்றி மனோஜ், விஜயாவிடம் சொல்கிறார். பதறிப் போன விஜயா வீட்டில் ரோகினி செய்த விஷயத்தை சொல்கிறார். பின் முத்து-மீனா இருவரும் மனோஜை காப்பாற்றுவதற்காக ஓட்டலுக்கு செல்கிறார்கள். இன்னொரு பக்கம் ஓட்டலில் ரோகிணி, கையெழுத்து போடுகிறாயா? நான் தூக்கு மாட்டட்டுமா? என்று மிரட்டிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் மனோஜ் பயந்து கொண்டு கையெழுத்து போட போகிறார். உடனே அந்த இடத்திற்கு கிரிஷ் வந்து விடுகிறார். கிரிசை பார்த்த ரோகினி, யார் உன்னை அழைத்து வந்தது என்று கேட்கிறார்

சீரியல் ட்ராக்:
அப்போது முத்து-மீனா இருவரும் உள்ளே வருகிறார்கள். ரோகினி, தன்னுடைய திட்டம் எல்லாம் சொதப்பிவிட்டதே என்று கோபப்படுகிறார். முத்து, மனோஜை திட்டி அங்கிருந்து அழைத்து செல்கிறார். மீனாவுமே ரோகிணிக்கு வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து, ஹோட்டலில் நடந்தது எல்லாம் சொல்கிறார். விஜயா, மனோஜை பயங்கரமாக திட்டிக் கொண்டிருக்கிறார். ரவி, அண்ணாமலை எல்லோருமே திட்டுகிறார்கள். பின் விஜயா, இதற்கெல்லாம் காரணம் மீனாவுடைய ராசி தான். அவள் இந்த வீட்டை விட்டு போனால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






