விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, என்னானது என்று நடந்ததை விசாரித்தார். ஆனால், மீனா எதுவுமே சொல்லவில்லை. மறுநாள் காலையில் மனோஜ், ஒரு பெரிய ஆபீசர் போல கோர்ட் போட்டு அமர்க்களம் செய்து கொண்டிருந்தார். வழக்கம்போல ரோகினி திமிராக பேசி இருந்தார். உடனே மீனா முறைத்தவுடன் அவர் அமைதியாகி விட்டார். அண்ணாமலை, செய்திருக்கும் வேலையை ஒழுங்காக பண்ணு என்று அறிவுரை எல்லாம் சொன்னார். மனோஜ் சொந்தமாக கம்பெனி ஆரம்பிப்பதை பற்றி வீட்டில் பேசி இருந்தார்.

விஜயா, இதற்கு எல்லாம் காரணம் ரோகினி வந்த நேரம் தான். நீங்கள் ரெண்டு பேருமே இன்னும் வளரனும். எனக்கு பிடித்த மருமகள் ரோகிணி தான் என்றெல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு பயங்கர கடுப்பானது. அதற்கு பின் மீனா வேலைக்கு கிளம்பி வந்தார். ஆனால், அங்கு அவர் கவனம் செலுத்தி எந்த வேலையுமே செய்ய முடியவில்லை. தப்பு தப்பாகவே செய்து கொண்டிருந்தார். இதனால் மீனாவுடன் வேலை செய்பவர்கள் எல்லோருமே விசாரித்தார்கள். ஆனால், மீனாக எதுவும் சொல்லவில்லை.
சிறகடிக்க ஆசை:
பின் முத்துமிடம் இதைப் பற்றி மீனாவின் தோழிகள் சொன்னார்கள். முத்து, மீனாவிற்கு என்ன ஆனது? என்று கவலையில் இருந்தார். அதற்கு பின் செல்வத்திடம் இதைப் பற்றி முத்து பேசி இருந்தார். கோவிலில் சாமியாடி சொன்ன வார்த்தையால் தான் மீனா இப்படி இருப்பாரோ? என்ற கேள்வி முத்துவுக்குள் எழுகிறது. இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய புதிய கம்பெனிக்கு பிஏவை எடுக்க வேண்டும் என்று சில பேரை இன்டர்வியூ எடுத்தார். அப்போது ஜீவா என்று தன்னுடைய முன்னாள் காதலியின் பெயர் வைத்திருக்கும் பெண்ணை செலக்ட் செய்தார். பின் மனோஜ், நிறைய கனவுகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ரோகினி, உள்ளுக்குள் மீனா உண்மை சொல்லிவிடுவாளா? என்று புலம்பி கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனாவிற்கு என்ன நடந்தது என்று கண்டுபிடித்து விட்டேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ரோகினி ரொம்பவே பதறுகிறார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒன்றும் பெரிய புரியவில்லை. அப்போது முத்து, சாமியாடி சொன்ன வார்த்தையை கேட்டு தான் மீனா இப்படி இருக்கிறார். நல்ல சாமியாரை பார்த்தால் சரியா போகும் என்று சொல்கிறார். சுருதி, டாக்டரை போய் பாருங்கள் என்கிறார். வழக்கம்போல விஜயா கிண்டல் அடிக்கிறார். அதற்குப்பின் முத்து, மீனாவை அழைத்துக் கொண்டு ஒரு சாமியாரை பார்க்க வருகிறார். அப்போது முத்துவை வெளியே இருக்க சொல்லிவிட்டு மீனாவிடம் அந்த சாமியார் பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
சாமியார், உன் மனதில் குற்ற உணர்ச்சியில் இருக்கிறாய். நல்லதுக்காக உண்மையை வெளியே சொல்ல முடியாமல் இருக்கிறாய். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. இதை நான் வெளியில் சொல்லவில்லை என்கிறார். அதனால் மீனா வருத்தப்படுகிறார். பின் முத்து, ஒன்றும் இல்லை என்று கையி கயிறு கட்டி விடுகிறார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி தன்னுடைய மகளுக்கு திருமணம் பற்றி பேசுவதற்காக சாமியாரை பார்க்க வருகிறார். அதற்கு அந்த சாமியார், உன் மகளாகவே திருமணம் செய்து கொள்வாள். இதனால் நீ போலீஸ் ஸ்டேஷன் செல்ல கூட சந்தர்ப்பம் இருக்கிறது என்று சொல்கிறார். கடைசியில் மீனா, ரோகிணியை பற்றிய மீண்டும் நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது முத்து நடந்ததை சொல் என்கிறார். அதற்கு மீனா அழுது கொண்டே ரோகிணியின் பெயர் கல்யாணி என்று எல்லா உண்மையும் சொல்லினார். இதைக் கேட்டு முத்து ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






