விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, தன்னுடைய அம்மாவிடம் சீதா கல்யாணத்திற்காக பேசி இருந்தார். அதற்கு மீனாவின் அம்மா, மாப்பிள்ளை முடிவு தான் என்னுடைய முடிவு. அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. சீதா மனதை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னார். பின் முத்து வரும் வழியிலேயே அருணம் பைக்கில் வந்தார். ஒத்தடி பாதை என்பதால் முத்து, அருணை பின்னாடி போக சொன்னார். அருண், முத்துவை பின்னாடி போக சொல்கிறார். இதனால் இருவருமே முறைத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த இடத்திற்கு வந்த சீதா, அருணை பின்னாடி போக சொல்லி சைகை காண்பிக்க, அருணும் விட்டுக்கொடுத்தார்.

இன்னொரு பக்கம் விஜயா, ரோகிணி தனக்காக கொடுத்த செயினை பார்வதியிடம் காண்பித்து சந்தோஷப்பட்டார். உடனே பார்வதி, நீயும் மருமகளும் சேர்ந்து விட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு விஜயா, அப்படி எல்லாம் இல்லை. அவளை எல்லாம் என் மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று வழக்கம்போல ரோகினி பற்றி கேவலமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி, விஜயாவை பார்க்க வருகிறாள். அவர், என்னுடைய பிறந்தநாளுக்கு அழைக்க வந்தேன். நீங்கள் வரவேண்டும் என்று பார்வதியையும் விஜயாவையும் அழைத்தார். விஜயா சரி என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் அருணை சந்தித்த சீதா, இந்த கல்யாணம் நடக்காது. என்னை மன்னித்து விடுங்கள் என்று பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சீதா, என் குடும்பம், என்னுடைய மாமாவின் சம்மதமும் இல்லாமல் நம்முடைய திருமணம் நடக்காது. என்னை மறந்து விடுங்கள் என்று சொன்னார். அருண் எடுத்து சொல்லியுமே சீதா கேட்கவில்லை. அதன்பின் வீட்டுக்கு வந்த சீதா, நான் இனிமேல் அருணை பார்க்க மாட்டேன். அவரிடம் இந்த திருமணம் நடக்காதுன்னு சொல்லிவிட்டேன் என அழுது கொண்டே சொன்னார். இதையெல்லாம் பார்த்து சத்யா, முத்துவிடம் சீதாவின் காதலை பற்றி பேச நினைத்தார். இன்னொரு பக்கம் முத்துவின் வீட்டிற்கு மலேசியா மாமா வந்தார்.

சீரியல் ட்ராக்:
அவரை பார்த்தவுடன் விஜயா ருத்ரதாண்டவம் ஆடி இருந்தார். அப்போது மலேசியா மாமா, ரோகினியிடம் நலம் விசாரித்துவிட்டு வீட்டில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். பின் மலேசியா மாமா, நான் செய்தது மிகப்பெரிய தவறு தான். இருந்தாலும் ரோகினியின் வாழ்க்கைக்காக தான் நான் பொய் சொன்னேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அண்ணாமலை எல்லாத்தையும் மறந்து மன்னித்து விட்டார். அதற்குப்பின் முத்து, சீதாவிற்காக பார்த்த மாப்பிள்ளை பற்றி விசாரிக்க கம்பெனிக்கு போனார். அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருவரும் மாப்பிள்ளை பற்றி குறை சொல்ல, முத்துவிற்கு இந்த சம்மந்தம் வேண்டாம் என்று வந்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா- சத்யா இருவருமே முத்துவை சந்தித்து சீதாவின் காதல் விஷயமாக பேசுகிறார்கள். அதைக் கேட்டவுடன் முத்து பயங்கரமாக கோபப்படுகிறார். பின் சத்யா, சீதாவினுடைய நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், முத்து ஏற்றுக்கொள்ளவே இல்லை. மீனா- சத்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் சுருதி- ரவி இருவரும் ரெஸ்டாரண்டை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ருதி, ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பதற்கு இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ரவிக்கு அதில் விருப்பமே இல்லை. இருந்தாலுமே ஸ்ருதி ரெஸ்டாரன்ட் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் இதைப் பற்றி ரவி, முத்து- மீனாவிடம் பேசுகிறார். மீனா, சுருதி சொல்வது சரிதான். அவர்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று சொல்கிறார். உடனே முத்து, நீ சுயமாக சம்பாதித்து ரெஸ்டாரன்ட் தொடங்கு. யார் பேச்சையும் கேட்காதே என்று சொல்கிறார். பின் மீண்டும் மீனா, சீதாவின் காதல் விஷயமாக முத்துவிடம் பேச, அவர் இன்னும் அதிகமாக கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, பாய் பிரண்டிடம் பேசுவது போல் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இதை கேட்டு மனோஜ் கோபப்படுகிறார் என்று தெரிந்துமே ரோகினி காதலரிடம் பேசுவது போல் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






