விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில். சிட்டி தான் சத்யாவை கடத்தி இருக்கிறார் என்று தெரிந்தவுடன் முத்து எல்லா இடங்களில் தேடி அலைந்து கொண்டிருந்தார். மீனா தன்னுடைய அம்மாவிடம் உண்மையைச் சொல்லி விட்டார். அவர் வேதனையில் அழுது புலம்பி கொண்டிருந்தார். பின் சீதா, அருணுக்கு கால் செய்து சத்யாவை கடத்தின விஷயத்தை சொன்னவுடன் அவரும் ஆறுதல் சொன்னார். பின் தனக்கு தெரிந்த போலீஸ் மூலம் சத்யா இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய சொல்கிறார் அருண். பின் அதை சீதாவிற்கு அனுப்பி இருந்தார்.

சீதா உடனே முத்துவிற்கு லொகேஷனை அனுப்பி விட்டார். பின் முத்து, சத்யா இருக்கும் இடத்திற்கு சென்று வந்தார். அங்கு சிட்டி, சத்யாவை தேர்வு எழுத விடக்கூடாது என்று இன்ஜெக்ஷன் போட பார்த்தார். உடனே முத்து அந்த இடத்திற்கு சென்று சிட்டியையும் அவருடைய ஆட்களையும் அடித்து சத்யாவை காப்பாற்றி விட்டார். அதற்குப்பின் அருண் சொன்னதால் போலீஸ்மே அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். சிட்டியும் அவருடைய கூட்டாளிகளையும் போலீஸ் கைது செய்து விட்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சத்யாவை காப்பாத்தின விஷயத்தை முத்து போன் செய்து வீட்டிற்கு சொன்னவுடன் மீனா, அவருடைய அம்மாவும் சந்தோஷப்பட்டார்கள். பின் சீதாவிற்கு போன் செய்த அருண், போலீஸ் போவதற்கு முன்பே உங்களுடைய மாமா சத்யாவை காப்பாற்றி விட்டார். ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொன்னார். உடனே சீதா, நீங்கள் செய்த உதவியால் தான் இதை செய்ய முடியாது என்று நன்றி சொன்னார். இன்னொரு பக்கம் முத்து வீட்டில் விஜயாவிடம் ரோகினி தன்னுடைய சம்பளப் பணத்தை கொடுத்தார்.

நேற்று எபிசோட்:
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த விஜயா பின் பணத்தை வாங்கி கொண்டார். உடனே அண்ணாமலை, பணத்தை வாங்குவது தவறு என்று சொன்னார். சுருதி, நாம் எல்லோரும் பேசினாலும் ரோகினி மாமியார் செய்வது சரியே என்று சொல்வார் என்றார். உடனே விஜயா, இவள் செய்த தவறுக்கு பைன் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சீதாவிற்கு உதவி செய்தது யார்? அவரைப் பார்த்து நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதாவும் அவருடைய அம்மாவும் அருணுக்கு நன்றி சொல்வதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், சீதா காதலிக்கும் விஷயம் அவருடைய அம்மாவிற்கு தெரியவில்லை. எதார்த்தமாக அருண் வீட்டில் பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புதிய ஆடருக்காக மண்டபத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த இடத்திற்கு சிந்தாமணி வருகிறார். அப்போது அந்த மண்டபத்தின் மேனேஜர், இந்த முறை யார் முதலில் டெபாசிட் செய்தார்களோ அவர்களுக்கு தான் ஆர்டர் என்று சொல்வதால் சிந்தாமணி, மீனாவை ஏளனமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே மீனா, இரண்டு நாளில் நான் பணத்தை ரெடி பண்ணி ஆர்டரை வாங்குவேன் என்று சவால் விட்டு வருகிறார். பின் வீட்டிற்கு வந்த மீனா, முத்துவிடம் நடந்ததை சொல்கிறார். உடனே முத்து, தன்னுடைய அப்பாவிடம் ஏலத்திற்காக பணத்தைக் கேட்கிறார். அப்போது மனோஜ் கிண்டலாக பேசுகிறார். உடனே விஜயா கோபப்பட்டு, மீனாவையும் முத்துவையும் ரொம்ப ஏளனமாகவும் கிண்டலாகவும் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






