ஆசை ஆசையாக சமைத்த மீனா, முத்து செய்த வேலை, வயித்தெரிச்சலில் விஜயா- சிறகடிக்கும் ஆசை

0
439
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்ல, எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து இருந்தார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். இறுதி சுற்றில், மனோஜின் முட்டாள் தனத்தால் நடுவர்களிடம் அசிங்கம் பட்டார். கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவித்தார்கள்.

-விளம்பரம்-

அதன் பின் முத்து- மீனா மாலை, மேல தாளத்துடன் வந்தவுடன் விஜயாவிற்கு முகமே மாறிவிட்டது. மறுநாள் மனோஜ், பேங்கில் வந்த கிரிடிட் கார்ட் பணத்தை வைத்து தன்னுடைய அம்மாவிற்கு காஸ்ட்லியான புடவை, மனைவிக்கு தங்க தாலி கொடி, தனக்கு 51,000 ரூபாயில் வாட்ச் என்று வாங்கி இருந்தார். ஆனால், தன் அப்பாவுக்கு ஒரு துண்டைக் கொண்டு வந்து கொடுத்தார். பின் முத்து, ஒரு நபரை சவாரிக்கு அழைத்து சென்ற இடத்தில் அந்த நபருடைய வீட்டில் சிட்டியும், சத்யாவும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருந்தார்கள். இதை எல்லாம் பார்த்த முத்து, மொபைலில் ரெக்கார்ட் செய்து சிட்டியை மிரட்டி இருந்தார். வேறு வழி இல்லாமல் முத்து சொன்ன மாதிரி சிட்டி கையெழுத்து போட்டு இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

பின் அந்த நபர் முத்துவுக்கு நன்றி சொல்கிறார். இந்த வாரம், சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய வீட்டில் கூல் ஊத்த இருப்பதாக மீனாவிடம் சொன்னார்கள். ஆனால், உன்னுடைய புருஷன் வரக்கூடாது என்று சத்யா சொன்னவுடன் மீனா கோபப்பட்டு பேசி இருந்தார். பின் முத்து இதை அறிந்து கோவிலுக்கு போக கூடாது என்று கண்டிஷன் போட்டார். இருந்தாலும், மீனா கோவிலுக்கு சென்று இருந்தார். இதை எல்லாம் பார்த்த விஜயா, முத்துவிடம் பற்ற வைத்து இருந்தார். முத்துவும் கோயிலுக்கு போனார். அங்கு முத்துவை பார்த்த மீனா, அதிர்ச்சியாகி நிற்க, முத்துவும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு வந்து விட்டார்.

சீரியல் கதை:

கடைசியில் முத்து, குடித்து விட்டு வந்து மீனாவிடம் சண்டை போட்டார். இதை பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். பின் முத்து வேலை செய்யும் இடத்திற்கு மீனாவின் அம்மா, தங்கை இருவருமே வந்து பேச, மீனா செய்ததை தப்பு போல் முத்து சொன்னார். எவ்வளவு பேசியும் முத்து ஏற்று கொள்ளாமல் கோபமாக அங்கிருந்து கிளம்பி இருந்தார். நேற்று எபிசோடில், ஸ்கூலில் அட்மிஷன் போடுவது பற்றி பேச ரோகினியும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது மனோஜ், எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

குழந்தை பிறந்த பிறகு அட்மிஷன் போடுகிறோம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். பின் குழந்தை பிறப்பதற்கு சாமியாரை பார்க்கலாம் என்று மனோஜ் சொல்ல, ரோகினிக்கு கோபம் வந்து டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று சொன்னார். இன்னொரு பக்கம் முத்து சவாரியில் ஒருவரை ஏற்றிக் கொண்டு செல்லும் போது தான் மீனாவின் நிலைமை புரிகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில், மீனா ஆசை ஆசையாக சிக்கன் குழம்பு செய்து வைத்திருக்கிறார். இதை வீட்டில் உள்ள எல்லோருமே சாப்பிட்டு மீனாவை புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அனால், விஜயா பொறாமையில் மீனாவை திட்டி பேசுகிறார்

இன்றைய எபிசோட்:

உடனே ஸ்ருதி, மீனாவிற்கு ஆதரவாக விஜயாவை கிண்டலாக பேசுகிறார். கடைசியில் எல்லோருமே குழம்பை காலி பண்ணி வைத்து விடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து முத்து வீட்டிற்கு வந்து மீனாவிற்கு ஸ்வீட் கொடுத்து மன்னிப்பு கேட்கிறார். பின் மீனாவும் தனியாக எடுத்து வைத்த சிக்கன் குழம்பை முத்துவிற்கு பரிமாறுகிறார். இருவரும் சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள். இதை பார்த்து விஜயா, வயிறு எரிகிறார். மறுநாள் கட்டிலில் மனோஜ் மோதி கொண்டதால் காலில் அடிபடுகிறது. இதனால் கடுப்பான விஜயா, முத்து- மீனாவிடம் விவாதம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement