விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் ரூமை தயார் செய்து வைத்திருந்தார். முத்து-மீனா இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின் மனோஜின் மொபைலுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதில் ரோகினி, மனோஜ் இருவரும் சேர்ந்து நடனமாடியது போல இருக்கிறது. அதை விஜயா பார்த்து கோபப்பட்டார். பின் மனோஜிடம் விசாரித்தார் அது ai வீடியோ. நான் ஆடவில்லை என்றார். இருந்தாலும் விஜயா நம்பவில்லை. மனோஜை புரட்டி எடுத்து அடித்தார். பின் இதைப்பற்றி முத்துவிடம் விஜயா சொன்னார்.

விஜயா, ரொம்ப பெருமையாக மனோஜை பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஆனால், நீத்து அதை கண்டுகொள்ளாமல் ரவியை பற்றி தான் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் விஜயா, மனோஜை நீ திருமணம் செய்து கொள்கிறாயா? என்றார். அதற்கு நீத்து, ரவிக்கு விவாகரத்து வாங்கி தந்து சுருதியை உங்கள் வீட்டை விட்டு அனுப்பி விடுங்கள். நானும் ரவியும் கல்யாணம் செய்து கொள்கிறோம் என்றார். இதனால் கடுப்பான விஜயா அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் மனோஜின் கடைக்கு சென்ற குறி சொல்பவர், மனோஜ் வாழ்க்கையில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி மீண்டும் உங்கள் மனைவியை தான் நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்றார்.
சிறகடிக்க ஆசை:
அதைக் கேட்டு டென்ஷன் ஆனா மனோஜ், அந்த குறி சொல்பவரை திட்டி அனுப்பி விட்டார். பின் ரோகிணியை சந்தித்த குறி சொல்பவர், நீங்கள் சொன்னது போலவே பேசிவிட்டேன். சிந்தாமணி அம்மாவிற்கு நான் விசுவாசமாக இருப்பேன் என்றெல்லாம் சொன்னார். இதனால் ரோகிணி ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் நிலா வேலை செய்யும் இடத்திற்கு சத்யா, ரேகா இருவரும் வருகிறார்கள். அப்போதுறை ஒரு புது ஆர்டரை ரேகா கொடுக்கிறார். மீனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக் கொண்டார். அப்போது அங்கு வந்த சிந்தாமணி, ரேகாவை திட்டினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா சொன்னது போல மீனா பூஜைக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்து ரவி, முத்து, அண்ணாமலை எல்லோருமே கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். இருந்தாலும் விஜயா அதை கண்டு கொள்ளவில்லை பூஜைக்கு எல்லாமே தயார் செய்கிறார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி அனுப்பிய சாமியாடி வீட்டிற்கு வருகிறார். அவர் வீட்டிற்குள் வந்தவுடன்
மனோஜியின் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் சொல்கிறார். பின் அவர், இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணம் இரண்டாவது மருமகள் தான். அவள்தான் இந்த வீட்டின் சாபக்கேடு.

சீரியல் ட்ராக்:
அவள் இந்த வீட்டை விட்டுப் போனால் உன் எல்லா பிரச்சனையும் தீரும். இல்லையென்றால் உன் கணவரின் உயிருக்கே ஆபத்து என்றெல்லாம் சொல்கிறார். இதனால் விஜயா ரொம்பவே பயந்து போகிறார். சாமியாடி சொல்வதைக் கேட்டு மீனா உடைந்து போய் அழுகிறார். கோபப்பட்ட முத்து, அந்த சாமியாடியிடம் சண்டைக்கு போகிறார். இருந்தாலும் விடாமல் அந்த சாமியாடி மீனாவைத்தான் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் முத்து, அந்த சாமியாடியை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். பின் விஜயா, மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அண்ணாமலை- முத்து இருவரும் விஜயாவிடம் சண்டைக்கு போகிறார்கள். சிந்தாமணியை பார்த்த சாமியாடி, நீங்கள் சொன்னது போல சொல்லிவிட்டேன் என்கிறார். இதனால் சிந்தாமணி ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.






