விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்ல, எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து இருந்தார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். அப்போது மீனா- முத்து பேசியதை கேட்டு அரங்கமே கைதட்டி இருந்தது. அதற்குப் பின் ஒவ்வொருவரின் சம்பளத்தை பற்றி கேட்க மனோஜ் திமிராக பேசி இருந்தார்.

சுருதி-ரவி, முத்து- மீனா இருவருமே தங்களுடைய சம்பளத்தையும், அதற்கு செலவு செய்யும் விதத்தையும் பற்றி கூறியதைக் கேட்டு நடுவர்களே கிளாப் செய்தார்கள். மூன்றாவது சுற்றில், சந்தோசமாக வாழ்வதற்கு என்ன தேவை என்ற சொன்னவுடன் ஒவ்வொரு ஜோடியும் தனித்தனியாக டிஸ்கஸ் செய்தார்கள். அப்போது மனோஜ் வழக்கம் போல் குருட்டுத்தனமாக யோசித்து ரோகினி இடம் சொல்வதை நடுவர்கள் கேட்டு, அதை காண்பித்தவுடன் அவருக்கு முகமே இல்லை. கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவித்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
பின் முத்து- மீனா மாலை, மேல தாளத்துடன் வந்தவுடன் விஜயாவிற்கு முகமே மாறிவிட்டது. ஒவ்வொரு ஜோடியும் போட்டியில் நடந்ததை பற்றி பேசி இருந்தார்கள். மறுநாள் மேஸ்திரியை கூட்டிட்டு வந்து வீடு கட்ட எவ்வளவு பணமாகும் என்று முத்து கேட்க, 4 லட்சம் ஆகும் என்று சொன்னவுடன் இருவரின் முகமும் மாறிவிட்டது. பின் மனோஜ், பேங்கில் இருந்து வந்த கிரிடிட் கார்ட் பணத்தை வைத்து தன்னுடைய அம்மாவிற்கு காஸ்ட்லியான புடவை, மனைவிக்கு தங்க தாலி கொடி, தனக்கு 51,000 ரூபாயில் வாட்ச் என்று வாங்கி இருந்தார்.

சீரியல் கதை:
பின் தன் அப்பாவுக்கு ஒரு துண்டைக் கொண்டு வந்து கொடுக்க, முத்து கோபப்பட்டு மனோஜ் இடம் சண்டை போட்டு திட்டி இருந்தார். மேலும், முத்து, ஒரு நபரை சவாரிக்கு அழைத்து சென்று இருந்தார். அந்த நபருடைய வீட்டில் சிட்டியும் சத்யாவும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருந்தார்கள். அந்த நபர் கொஞ்சியும் சிட்டி விடவில்லை. இதை எல்லாம் பார்த்த முத்து, மொபைலில் ரெக்கார்ட் செய்து சிட்டியை மிரட்டி இருந்தார். வேறு வழி இல்லாமல் முத்து சொன்ன மாதிரி சிட்டி செய்து இருந்தார். பின் அந்த நபர் முத்துவுக்கு நன்றி சொல்கிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய வீட்டில் கூல் ஊத்த முடிவு செய்து இருக்கிறார்கள். அந்த சமயம் வீட்டுக்கு வந்த மீனாவிடம் தகவலை சொல்கிறார்கள். ஆனால், உன்னுடைய புருஷன் வரக்கூடாது என்று சத்யா சொன்னவுடன் மீனா கோபப்பட்டு பேச, உன் புருஷன் வந்தால் நான் கோயிலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு சத்யா சென்று விடுகிறார். மீனாவும் இதை வீட்டில் எப்படி சொல்வது என்று சொல்லாமல் தயங்கி தயங்கி முத்துவிடம் பேச, முத்து கண்டுபிடித்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
கடைசியில், உன் தம்பி என்னை வர வேணாம் என்று சொல்லி இருக்கிறான். எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் உனக்கு மட்டும் எப்படி மரியாதை தருவார்கள்? நீ போகவே கூடாது என்று சொல்லி முத்து சென்று விடுகிறார். மீனாவும் தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறார். அந்த சமயம் அங்கு வந்த ஸ்ருதி, உங்களுக்கு தோன்றியதை செய்யுங்கள். யார் பேச்சையும் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். இதையெல்லாம் விஜயா பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






