விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ்க்கு பணம் கொடுத்த பைனான்சியர் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்தவுடன் முத்து பயங்கரமாக கோபப்பட்டார். அண்ணாமலை, முத்துவை தடுத்து நிறுத்தி பைனான்சியரை சந்தித்து பேசியது எல்லாம் சொன்னார். அப்போது பைனான்சியர், உங்கள் அப்பா ரொம்ப நல்லவர். 3 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு தன் குடும்பத்தை எதுவும் செய்ய வேண்டாம் என்று ரொம்ப கெஞ்சினார். இப்படிப்பட்ட அப்பா கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரொம்ப பெருமையாக அண்ணாமலையை பற்றி பேசி இருந்தார்.

இனிமேல் உங்கள் குடும்பத்தில் உள்ள யாரையும் நான் எதுவும் செய்ய மாட்டேன். மீதி இருக்கும் பணத்தை மனோஜ் மாதம் கொடுக்க வேண்டும். அதற்கு ரோகினி- மனோஜ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லி பத்திரத்தில் கையெழுத்து போட சொன்னார். பைனான்சியர். மனோஜ், அமைதியாகவே தயங்கி நிற்பதால் விஜயாவே திட்டி கையெழுத்து போட சொன்னார். அதற்கு பின் பைனான்சியர் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் ரோகினி- மனோஜ் இருவரும் பிசினஸை எப்படியாவது டெவலப் செய்து கடனை எல்லாம் அடைக்க வேண்டும் என்றார்கள்.
சிறகடிக்க ஆசை:
ரோகிணி, இப்போது இருக்கும் தொழிலை டெவலப் செய்தால் போதும் என்று ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தினார். அதற்குப்பின் கிரிஷ், ஸ்கூலில் பீஸ் கட்ட சொல்லி லெட்டர் கொடுத்திருந்தார். அதை பார்த்து முத்து, நான் கட்டுகிறேன் என்றார். கிரிஷ் கேட்டுக் கொண்டதால் ரோகிணி, மனோஜை கட்ட சொல்கிறார். உடனே விஜயா திட்டினார். பின் ஒரு வழியாக முத்து பணத்தை கட்ட ஒத்துக் கொண்டார். அதற்கு பின் அண்ணாமலை, தன் அம்மாவை இழந்த சோகம் கிரிஷ் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. கிரிஸ் பாட்டி, எதற்காக கிரிஷை இங்கு விடணும். ஏதோ மர்மம் இருக்கிறது. அதை கண்டுபிடிக்கணும் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து. அண்ணாமலை இருவரும் கிரிஷ் மீது சந்தேகப்படுவதால் மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். இதை அறிந்த மீனா, ரோகினியை மாடிக்கு அழைத்து பேசுகிறார். அப்போது மீனா, இனிமேல் உண்மையை மறக்க முடியாது. மாமாவிற்கும் என் கணவருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்குள் நீ உண்மையை சொல்ல வேண்டும். இல்லை என்றால் நானே வீட்டில் சொல்லி விடுவேன். என்னால் இனிமேல் நடிக்க முடியாது என்று சொல்கிறார். ரோகினி எவ்வளவோ கெஞ்சி கேட்டுமே மீனா ஒற்றுக்கொள்ளவில்லை. 7 நாள் கெடு என்று சொல்லிவிட்டு மீனா செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனா, நான் கிரிஷ் பாட்டியிடம் பேசி இருக்கிறேன். ஏழு நாட்களுக்குள் வந்து எல்லா விஷயத்தையும் சொல்வதாக சொன்னார். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று தன்னுடைய மாமனாரிடமும் சொல்கிறார். அதற்கு பின் மீனா அம்மாவிற்கு பிறந்தநாள் என்பது வீட்டில் அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்கள். சீதா அருண் இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். பின் எல்லோருமே சேர்ந்து மீனா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அந்த சமயம் மீனாவிற்கு போன் செய்த மகேஸ்வரி, வீட்டில் ரோகிணி பற்றி உண்மை சொல்லாதீர்கள். வேறு ஏதாவது செய்யலாம் என்று ஏதேதோ பேசி கெஞ்சுகிறார். ஆனால், மீனா தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை உறுதியாக இருக்கிறார். இதனால் ரோகிணி என்ன செய்வது என்று புரியாமல் பயப்படுகிறார்.






